சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

தர்ஷினி கிட்ட நெருங்கிய மருமகள்கள்.. பிளான் பண்ணி ஜீவானந்தத்தை தூக்கிய ராமசாமி, கிருஷ்ணசாமி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஞானம் மற்றும் கதிர் தற்போது எது சரி, தவறு என்று புரிந்து கொண்டு மனதில் இருக்கும் ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் விதமாக விசாலாட்சி இடம் பேசி விட்டார்கள். இதனைப் பார்த்த தாரா பாப்பா ஞானம் மற்றும் கதிரை வெளியே கூட்டி வந்து குணசேகரன் பெரியப்பா இவ்வளவு தூரம் பேசி அசிங்கப்படுத்தின பிறகும் இங்கே சாப்பிட வேண்டாம்.

அதனால் நாம் அனைவரும் வெளியே ஹோட்டலில் போய் சாப்பிடலாம் என்று சொல்கிறார். அத்துடன் கதிருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக உங்களால் இந்த ஸ்டிக் இல்லாமல் நடக்க முடியும். அதை தூக்கி எறிந்து விட்டு தனியாக நடக்க முயற்சி பண்ணுங்கள் என்று சொல்கிறார். அடுத்ததாக ஜீவானந்தம் மற்றும் குணசேகரன் வீட்டுப் பெண்கள் தர்ஷினி இருக்கும் இடத்தை நெருங்கி விட்டார்கள்.

அதே நேரத்தில் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் நபர், ஜீவானந்தத்திடம் காட்டின பேப்பரை பார்க்க முடியவில்லை. அதற்குள் ஜீவானந்தத்திடம் விசாரிப்பதற்காக போலீசார் வந்து விடுகிறார்கள். ஏனென்றால் குணசேகரன், தர்ஷினி காணாமல் போனதற்கு முக்கிய காரணம் ஜீவானந்தம் தான் என்று புகார் கொடுத்திருக்கிறார்.

Also read: இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்.. கதிரின் மாற்றத்தால் முன்னுக்கு வந்த எதிர்நீச்சல்

அதன்படி ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி போலீசார் மூலம் ஜீவானந்தத்தை கூட்டிட்டு வர சொல்லி இருக்கிறார்கள். அதனால் ஜீவானந்தமும் அவர்களுடன் போய்விடுகிறார். இதையெல்லாம் பார்த்த ஜனனி நாம் இப்பொழுது ஜீவானந்தம் சொன்ன அந்த எஸ்டேட்டுக்கு போய் பார்க்கலாம் என்று அனைவரையும் கூட்டிட்டு போகிறார்.

கிட்டத்தட்ட தர்ஷினி இருக்கும் இடத்தை நெருங்கி விட்டார். ஆனால் இது அந்த கும்பலுக்கு தெரிந்திருக்கும், அதனால் தர்ஷினியை வேறொரு இடத்திற்கு மாற்றி வைத்திருப்பார்கள். பிறகு அந்த இடத்திற்குள் நுழைந்த ஜனனி, தர்ஷினி இல்லை என்றதும் வெளியே வரும் பொழுது தர்ஷினி அங்கே எழுதிப் போட்ட ஒரு லெட்டர் அவர்கள் கையில் கிடைக்கிறது.

அதன் மூலம் ஓரளவுக்கு தர்ஷினி இங்கே தான் இருந்திருக்கிறார், தற்பொழுதும் இந்த இடத்தில் பக்கத்தில் தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஜனனி சொல்லி அனைவரும் தேட ஆரம்பிக்கிறார்கள். இதற்கு இடையில் கதிர், ஞானம், சக்தி மற்றும் ஆதிரை அனைவரும் ஒன்று கூடி குணசேகரன் எவ்வளவு மோசமானவர் என்பதை பற்றி பேசுகிறார்கள். இனி இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி பெண்களுக்கு சப்போர்ட்டாக ஆதரவை கொடுக்கப் போகிறார்கள்.

Also read: முடிவுக்கு வரும் ரோகினியின் ஆட்டம்.. விஜயா மூஞ்சில் கரியை பூச போகும் முத்து

Trending News