ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

KS பரத், விருத்திமான் சாஹாவால் வந்த ஆபத்து.. சின்னத் தம்பிக்கு கேட்காமலே ஓய்வு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது. 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த தொடர் முடிவுற்ற நிலையில் வரும் 27ஆம் தேதி டெஸ்ட் போட்டிகள் ஆரம்பமாகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கழித்து விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லாமல் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணியில் சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டவர் ரிஷப் பந்த். ஆனால் அவருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கே எஸ் பரத் மற்றும் விருத்திமான் சாஹா இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ரிஷப் பந்த் நல்ல பார்மில் இருந்தும், அவரின் விக்கெட் கீப்பிங் செயல்பாடுகளும் நன்றாக இருந்தும்கூட அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த ரிஷப் பந்த், தொடர்ச்சியாக விளையாடி வருவதால் அதிக பணிச்சுமை இருக்கிறது.

Rishap-Pant-Cinemapettai.jpg
Rishap-Pant-Cinemapettai.jpg

இதனை தான் ஒருபோதும் அணி நிர்வாகத்திடம் கூறியதில்லை என்றும், எந்த சூழ்நிலையிலும் அணிக்காக சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை கே எஸ் பரத் மற்றும் விருத்திமான் சாஹா இருவரும் சிறந்த பங்களிப்பை அளித்தால் சின்னத்தம்பியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

Trending News