திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினி வில்லனை நோக்கி படையெடுக்கும் இயக்குனர்கள்.. முதல் ஆளாக முந்தி கொண்ட கே எஸ் ரவிக்குமார்

வளர்ந்து வரும் ஒவ்வொரு நடிகருக்கும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர் பக்கத்தில் இருக்கும் படியான சிறு கதாபாத்திரம் என்றால் கூட போதும் என காத்துக் கொண்டிருக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் ரஜினிக்கு வில்லனாக நடித்த ஒருவருக்கு இப்போது அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

சூப்பர் ஸ்டார் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகபட்சமாக இருக்கிறது.

Also read: ஆல் டைம் பான் இந்தியா ஸ்டார் கமல் சார் தான்.. ரஜினி ரசிகர்களை சீண்டி பார்த்த நடிகர்

இந்நிலையில் இதில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கும் சிவராஜ்குமாரை தேடி பல தமிழ் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் பல இயக்குனர்கள் இவருக்கான கதையை தயார் செய்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்களாம். அந்த அளவுக்கு படம் வெளிவருவதற்கு முன்பே இவருக்கான மார்க்கெட் தமிழில் உயரத் தொடங்கி இருக்கிறது.

கன்னட திரையுலகில் பெரும் நடிகராக இருக்கும் இவர் ஜெயிலர் படத்திற்கு பிறகு தமிழில் பிசியாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் இவருடைய கதாபாத்திரம் அந்த அளவுக்கு பவர்ஃபுல்லாக இருக்கிறதாம். அதனாலேயே இப்போது கேஎஸ் ரவிக்குமார் இவரை சந்தித்து ஒரு கதையை கூறியிருக்கிறார்.

Also read: அந்தஸ்து வந்தவுடன் பழசை மறந்த கமல், ரஜினி.. ஒரேயடியாக ஓரம் கட்டப்பட்ட நடிகர்

அது சிவராஜ்குமாருக்கு ரொம்பவும் பிடித்துப்போனதால் உடனே ஆரம்பிக்கலாம் என்று அவர் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். அதைத்தொடர்ந்து தற்போது அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இப்படி பல இயக்குனர்கள் அவரை ரவுண்டு கட்டி வந்த நிலையில் முதல் ஆளாக கே எஸ் ரவிக்குமார் கால்சீட்டை வாங்கி இருக்கிறார்.

கடைசியாக தெலுங்கு திரைப்படங்களை இயக்கியிருந்த கே எஸ் ரவிக்குமார் ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் அவரின் தம்பியை வைத்து படம் எடுக்க போகும் இவர் அதை முடித்துவிட்டு சிவராஜ்குமார் படத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.

Also read: அஜித்தை பாடாய்படுத்தும் விடா முயற்சி.. ரஜினி படத்திற்கும் அதே கதி தானா?

Trending News