சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் அதிகம் நடித்த நடிகர் யார் தெரியுமா? பாதி வருஷம் இவர் கூடவே போச்சி

கே எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர். இவர் எடுத்த அனைத்து படங்களும் வெற்றி கண்டது, ஆனால் வெற்றி என்றுமே நிரந்தரம் இல்லை. தற்போது இயக்கத்தைவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கே எஸ் ரவிக்குமார் அவர்கள் 9 திரைப்படங்களை சரத்குமாரை வைத்து இயக்கியுள்ளார்.

சேரன் பாண்டியன்: 1991 இல் வெளியான சேரன் பாண்டியன் இத்திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் விஜயகுமார் நடித்திருப்பார். கிராமத்தில் அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மிக அற்புதமாக கையாண்டிருப்பார் கேஎஸ் ரவிக்குமார்.

ஊர் மரியாதை: 1992 ஆம் ஆண்டு வெளியான ஊர் மரியாதை. இதில் சரத்குமார், நெப்போலியன், ஆனந்த், சசிகலா ஆகியோர் பிரதான தோற்றத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாக கேஎஸ் ரவிக்குமாருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது

பேண்ட் மாஸ்டர்: 1993 ஆம் ஆண்டு பேண்ட் மாஸ்டர். ரஞ்சிதா, விஜயகுமார், ஸ்ரீவித்யா ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.

நாட்டாமை: 1994ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை திரைப்படம். இத்திரைப்படத்தில் குஷ்பூ மற்றும் மீனா நடித்து இருப்பார். படத்தில் சரத்குமார் இருவேடங்களில் அண்ணன் தம்பியாக நடித்து இருப்பார். கிராமத்து நிலவரத்தை புட்டு புட்டு வைத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். இன்றளவும் மக்கள் மனதில் சரத்குமார் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்பதற்கு இந்த ஒரு படம் உதாரணமாகக் கூறலாம்.

நட்புக்காக: 1998 ஆம் ஆண்டு விஜயகுமார், சரத்குமார்,சிம்ரன்,  சித்தாரா ஆகியோர் நடித்த நட்புக்காக இத்திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மீண்டும் அண்ணன் தம்பி பாசத்தில் வெற்றிகண்ட படமாக நட்புக்காக படம் பார்க்கப்படுகிறது.

Natpukkaga
Natpukkaga

பாட்டாளி : 2000 ஆண்டு சரத்குமார், தேவயானி,ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை வைத்து இயக்கிய படம் பாட்டாளி.

சமுத்திரம்: 2001ம் ஆண்டு வெளியான சமுத்திரம் திரைப்படம்.சரத்குமார், முரளி,அபிராமி ஆகிய நடித்திருப்பார்.

பாறை: 2003ஆம் ஆண்டு பாறை திரைப்படம் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தில் சரத்குமார்,ஜெயராம்,மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஜக்குபாய்: 2010ஆம் ஆண்டு ஜக்குபாய் திரைப்படத்தையும் சரத்குமாரை வைத்து இயக்கியிருந்தார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

Trending News