புதன்கிழமை, ஜனவரி 8, 2025

6 வருடம் கழித்து தூசு தட்டப்படும் கேஎஸ் ரவிக்குமார், ரஜினி கூட்டணி.. அந்தக் கதையை மீண்டும் கேட்ட சூப்பர் ஸ்டார்!

கேஎஸ் ரவிக்குமார் அடுத்ததாக தயாரித்து நடிக்கும் படமான மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் படத்தின் பூஜையில் ரஜினி கூட்டணி பற்றி பேசியுள்ளார். கே எஸ் ரவிக்குமார் சமீபகாலமாக படங்களை இயக்குவதை கைவிட்டுவிட்டு நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் அவருடைய நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கை கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் சொந்தமாக தயாரித்து நடிக்க உள்ளார். இந்த படத்தை சபரீஷ் சரவணன் என்ற இரட்டையர் இயக்க உள்ளனர்.

மேலும் இதில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் கூகுள் குட்டப்பன் படத்தின் பூஜை இன்று தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து படம் இயக்குவீர்களா? என பத்திரிகையாளர் எதார்த்தமாக கேட்க மிகப்பெரிய சிகரெட் ஒன்றை உடைத்துள்ளார் கேஎஸ் ரவிக்குமார்.

கேஎஸ் ரவிக்குமார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட திரைப்படம் தான் ராணா. அந்தப் படத்தின் ஒரு பகுதி தான் கோச்சடையான் என்ற பெயரில் அனிமேஷன் படமாக வெளியானது. அதற்கும் கதை திரைக்கதை கேஎஸ் ரவிக்குமார் தான்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினி கே எஸ் ரவிக்குமாருக்கு போன் செய்து உடனடியாக வீட்டிற்கு வருமாறு அழைத்தாராம். பின்னர் கைவிடப்பட்ட ராணா படத்தின் கதையை மீண்டும் சொல்லச் சொல்லி கேட்டுள்ளார். சில நேரம் அவகாசம் எடுத்துக்கொண்டு மீண்டும் ராணா படத்தின் கதையை கேஎஸ் ரவிக்குமார் சொன்னதும், வருடங்கள் கடந்தும் படத்தின் வீரியம் குறையாமல் அப்படியே இருப்பதாகவும், இந்த கதையை எப்போது வேண்டுமானாலும் படமாக்கலாம் என கூறினாராம்.

rana-rajinikanth
rana-rajinikanth

இதனால் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. மீண்டும் எவர்கிரீன் கூட்டணி இணைந்தால் அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய கூட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். ஒற்றை வார்த்தையில் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியைப் பற்றி கமெண்டில் பதிவு செய்யலாம்.

Trending News