கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தசாவதாரம். தமிழ் திரை உலகில் பல மாறுபட்ட கதாபாத்திரங்களின் மூலம் நம்மை ஆச்சரியப்படுத்தும் கமல் இந்த படத்தில் கிட்டத்தட்ட 10 வேடங்களில் நடித்திருந்தார்.
அசின், நெப்போலியன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் பல கோடி வசூலை வாரி குவித்தது. இந்த படத்திற்காக கேஎஸ் ரவிக்குமார் மற்றும் கமல் இருவரும் கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். மூன்று வருடகாலம் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் இன்றும்கூட ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது.
தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது தொடங்குவீர்கள் என்று கேஎஸ் ரவிக்குமாரிடம் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலளித்த அவர், விக்ரம் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நான் கமலை ஒரு முறை சந்தித்தேன்.
அப்போது நாங்கள் தசாவதாரம் திரைப்படம் பற்றி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தோம். படம் வெளியாகி கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு கமல் இவ்வளவு வருஷம் ஆயிடுச்சா என்று மிகவும் ஆச்சரியத்துடன் கேட்டார்.
ஆனால் இப்போது பலரும் என்னிடம் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனக்கும் கமலுக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் அப்படி ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் எடுக்க எங்களால் முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சமீபகாலமாக திரையுலகில் பல திரைப்படங்கள் இரண்டு, மூன்று என்று பல பாகங்களாக வெளி வந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது பல சாதனைகளை படைத்த இந்த தசாவதாரம் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் ஆசையாக இருந்தது. ஆனால் இயக்குனர் அந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியாது என்று கூறியிருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஆழ்த்தியுள்ளது.