வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வளர்த்துவிட்ட ஏணியை உதறித் தள்ளிய பிரபலங்கள்.. நம்பி இருந்த குஞ்சுமோனனுக்கு கிடைத்த அவமானம்

KT kunjumon: பிரபல தயாரிப்பாளரான கேடி குஞ்சுமோன் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போது ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் ஜென்டில்மேன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சமீபகாலமாக இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அதனால் குஞ்சுமோன் தனது சூப்பர் ஹிட் படத்தை இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற திட்டத்தில் தான் ஜென்டில்மேன் 2 படத்தை எடுக்கிறார். இந்த படத்திற்கு ஆர்ஆர்ஆர், பாகுபலி போன்ற படங்களில் இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். ஆனால் இதில் யாரும் உதவி செய்யவில்லையாம்.

Also Read : கே டி குஞ்சுமோன் அறிமுகப்படுத்தி புகழை சம்பாதித்த 5 பிரபலங்கள்.. 175 நாட்கள் ஓடி கலெக்ஷன் பார்த்த அர்ஜுன்

அதாவது இப்படத்தில் ஆரம்பத்தில் அர்ஜுன் நடிப்பதாக சொன்ன நிலையில் கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டார். மேலும் காதலன் படத்தின் மூலம் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது வரை குஞ்சுமோன் அவரிடம் பேசாமல் இருக்கிறார்.

மேலும் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துக் கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் கடைசியில் அவரும் முடியாது என்று சொல்லிவிட்டாராம். எல்லோரும் கைவிட்டாலும் இந்த படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் குஞ்சுமோன் இருந்துள்ளார்.

Also Read : பெயரை போடாமல் பழி வாங்கிய தயாரிப்பாளர்.. 29 வருடங்கள் ஆகியும் பகையை மறக்காத ஷங்கர்

ஆனால் இந்த படத்தின் விழாவில் ஜென்டில்மேன் முதல் பாகத்தின் பிரபலங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தார். அதற்கான அழைப்பையும் விடுத்திருந்தார். ஆனால் அந்த விழாவில் ஒருத்தர் கூட கலந்து கொள்ளவில்லையாம்.

மேலும் கலந்து கொள்ளாததற்கான காரணத்தையும் கூறவில்லையாம். வளர்த்து விட்ட பிரபலம் ஒருவர் அழைத்த பின் என்னதான் பிரச்சனை இருந்தாலும் ஒருவர் கூட வராதது குஞ்சுமோனனுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : கடைசி 5 படங்களில் ரஜினி குவித்த கோடிகள்.. ஷங்கர் பட கலெக்சனை தூக்கி சாப்பிட வைத்த நெல்சன்

Trending News