திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சரக்குடன் பட்டையை கிளப்பும் அமலாபாலின் ட்ரெய்லர்.. இந்த கெட்டப்பு தலைவா படத்துல பார்த்த மாதிரியே இருக்கே!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் 2009ஆம் ஆண்டு நீலதமர என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.

சிந்து சமவெளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பின்பு நிமிர்ந்துநில் ,வேட்டை, வேலையில்லா பட்டதாரி, ஆடை, தலைவா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆடை திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது சிலர் அவர் துணிச்சலான நடிப்பை பாராட்டையும் பேசினர். இத்திரைப்படம் மூலமாக சமூக வலைதளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர்.

அமலாபால் இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்தார். இருப்பினும் ஒரு சில கருத்து வேறுபாட்டால் திருமண பந்தம் ஓராண்டுக் உள்ளேயே முடிந்துவிட்டது இருவரும் பரஸ்பரமாக பிரிந்து விட்டனர்.

தற்போதைய கேஆர் வினோத் இயக்கத்தில் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தில் அமலாபால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் தெலுங்கில் kudi yedamaithe என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

அந்த வெப்சீரிஸ் டிரைலர் லான்ச் விழாவில் மிக கிளாமரான உடையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் அமலாபால்.

amalapaul-cinemapettai
amalapaul-cinemapettai

Trending News