வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஏலத்திற்கு தயாராகும் குந்தவை, நந்தினியின் நகைகள்.. போட்டி போடும் நிறுவனங்கள்

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலுடன் காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் மக்களின் பார்வைக்கு வர இருக்கிறது. கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த கதை ரசிகர்களை பெரும் தாக்கத்திற்கு உட்படுத்தியது.

அப்படி ரசிகர்கள் படித்து வியந்த சோழ சாம்ராஜ்யத்தின் கதையை திரை வழியாக பார்ப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர், போஸ்டர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

Also read:விக்ரம் பிரபுவை மிரளவைத்த பொன்னியின் செல்வன் கேரக்டர்.. சூடுபிடிக்கும் புரோமோஷன்

ரிலீசுக்கு முன்பே பரபரப்பை கூட்டி இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் தற்போது மேலும் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை மற்றும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், திரிஷா இருவரும் சோழர்கால பாணியில் நகைகளை அணிந்திருந்தனர்.

அதில் தங்கம், ஐம்பொன் போன்ற நகைகளும் அடக்கம். மிகவும் ஸ்பெஷல் ஆக தயார் செய்யப்பட்ட அந்த நகைகளில் சில கவரிங் நகைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தில் அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் விற்பனைக்கு வர இருக்கிறது.

Also read:சோழ வம்சத்தை கருவறுக்கும் வீரபாண்டியன் ஆபத்துதவிகள்.. பொன்னியின் செல்வன் எக்ஸ்கிளூசிவ் வீடியோ

அந்த காலத்தில் எல்லாம் பத்மினி,  போன்ற பிரபல நடிகைகள் அணிந்திருந்த நகைகள், புடவைகள் போன்றவை ஏலத்திற்கு விடப்படும். அதை பல ரசிகர்களும் ஆவலுடன் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய காலமும் உண்டு. அதே போன்று தான் தற்போது பொன்னியின் செல்வன் பட குழுவும் இளவரசிகளின் நகைகளை ஏலம் விட இருக்கிறது.

இதை அறிந்த பல முன்னணி நிறுவனங்களும் அந்த நகைகளை வாங்குவதற்கு போட்டி போட்டு வருகின்றன. அதிலும் ஒரு முன்னணி நிறுவனம் சோழர்கால நகைகள் என்று அந்த நகைகளை மக்களிடம் அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. கூடிய விரைவில் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் அணிந்த நகைகள் ஏலம் விட இருக்கிறது. இந்த தகவல் தற்போது பெண்களை ஆர்வம் கொள்ள வைத்திருக்கிறது.

Also read:யாருக்கு இப்படி ஒரு குடுப்பனை கிடைக்கும்.. பொன்னியின் செல்வன் படத்தில் இவர்தான் ப்ளே பாய்!

Trending News