தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ. அந்த காலத்தில் இவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
நம்ம ஊரில் உள்ள ரசிகர்கள் குஷ்புவுக்கு கோவில் கட்டி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு அவ்வப்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த குஷ்பூ ஒரு கட்டத்தில் சினிமாவை நிறுத்திவிட்டு அரசியல் அதிரடியில் களமிறங்கினார். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது நாயகியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
குஷ்பூ சுந்தர் சி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை இவர்களது இரண்டு பெண் பிள்ளைகளும் உடல் எடையில் சற்று பெருத்து இருந்தனர்.
ஆனால் தற்போது யாருமே யூகித்த பார்க்க முடியாத அளவுக்கு தங்களது உடல் எடையில் அக்கறை செலுத்தி வெகுவாக குறைத்துள்ளனர். அதிலும் அனந்திதா சுந்தர் சுமார் 20 கிலோவுக்கு மேல் தனது உடல் எடையை குறைத்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.

இதனை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த பல பிரபலங்களும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
