புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? நொந்து போன ஜெயம் ரவி அப்பா அம்மா.. உள்ள புகுந்து வேலையை பார்த்த குஷ்பூ

ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்திருக்கிறார். ஆனால் ரவியுடன் பேசுவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என ஆர்த்தி கூறியிருக்கிறார். இதற்கிடையே கெனிஷாவுடன் தொடர்புப்படுத்தி பேசப்பட்டதற்கு ரவி தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார்.

தற்போது, பிக் பாஸ் ஆரம்பித்ததால் இந்த அலை கொஞ்சம் ஓய்ந்திருக்கும் நேரத்தில், மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார். “நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

உள்ள புகுந்த குஷ்பூ

இந்த நிலையில், இந்த விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பத்திலிருந்தே குஷ்பூ கணடனத்தை தெரிவித்து வந்தார். இவர் ஏன் சம்மந்தம் இல்லாமல் கூவுகிறார் என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. ஆனால் அவர் இதில் தலையிட்டதற்கான காரணம் இப்பொது தான் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் சில விஷயங்களை தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில், “குஷ்பூதான் இந்தக் கல்யாணத்துக்கு காரணம். முதலில் ஜெயம் ரவியின் வீட்டில் ஆர்த்தியை மருமகளாக ஏற்றுக்கொள்வதற்கு விருப்பமே இல்லை. ஆனால் ஜெயம் ரவியின் காதல், குஷ்பூவின் பேச்சுவார்த்தை எல்லாம் ரவியின் அப்பாவை மாற்றியது. இப்போது இரண்டு பேருக்கும் விவாகரத்து நடந்திருக்கிறது.”

“இதனால் தனது மகனின் வாழ்க்கை போய்விட்டதே என்று ரவியின் அப்பாவும், அம்மாவும் நொந்து போயிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு ரவி மீது கொஞ்சம் அதிகமாகவே பாசம் இருக்கிறது. முக்கியமாக இத்தனை வருடங்கள் பாசத்தை கொட்டி வளர்த்த மகனின் வாழ்வு இப்படி போய்விட்டதே என்ற மனநிலையில் இருக்கிறார்கள்”என்றார். இது தற்போது மறுபடியும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது.

Trending News