தமிழக பாஜக கட்சியின் பாலியல் புகார் தற்போது வைரல்ஆகி க்கொண்டிருக்கிறது. இதைக் குறித்து நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு தன்னுடைய கருத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் கே.டி .ராகவன் அவர்கள் இவர் தமிழக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர். 25 வருடங்களுக்கு மேலாக பாஜகவில் தன்னுடைய பணியை செய்து வருகிறார். இப்போது அவர் ஒரு பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.
யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் என்பவர் கே .டி .ராகவன் பாஜக பெண் நிர்வாகி இடம் பாலியல் செயலில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். இந்த வீடியோ வெளியானதும் கட்சி ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கே டி ராகவன் மாநிலத் தலைவரான அண்ணாமலை உடன் ஆலோசனை நடத்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார்.
மேலும் பலர் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பெண்களை உயர் பதவிகளை வாங்கி தருவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் புகார் வந்துள்ளது இதைதொடர்ந்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டத்திலிருந்து தப்பினாலும் தெய்வம் தப்பிக்க முடியாது என்றும், அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பாஜகவில் உள்ள குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தேசிய அளவிலும் சரி தமிழக பாஜகவின் சரி பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் ஒரு துரதிஷ்டவசமானது, இதற்காக ஒட்டுமொத்த கட்சியையும் சிலர் குற்றம் சாட்டுவது எனக்கு வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
குஷ்புவை ஆதரித்தும் சிலர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இதற்கு நியாயமான விசாரணை நடத்த வேண்டும் ,மேலும் இதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.