ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா.? தவறாக விமர்சித்தவரின் வீட்டுப் பெண்களை வம்புக்கிழுத்த குஷ்பூ

Actress Kushboo: குஷ்பூ என்றாலே அதிரடி தான் என்று சொல்லும் அளவுக்கு சோசியல் மீடியாவில் அவர் ரவுண்டு கட்டி வருகிறார். மனதில் பட்டதை தைரியமாக வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசும் இவர் தன்னை பற்றி வரும் மோசமான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க தவறுவது கிடையாது.

அந்த வகையில் தற்போது நெட்டிசன் ஒருவர் இவர் போட்ட பதிவுக்கு மோசமான ஒரு கமெண்ட்டை கொடுத்திருக்கிறார். இதனால் பத்ரகாளியாக மாறிய குஷ்பூ அவருடைய வீட்டுப் பெண்களை எல்லாம் வம்புக்கு இழுத்து பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அதாவது குஷ்பூ, சுந்தர் சி உடனான தன்னுடைய காதலை ஒரு பதிவு மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.

Also read: என்னை சீண்டி பார்த்தால் தாங்க மாட்டீங்க.. அவதூறாக பேசினால் சும்மா விடமாட்டேன் ஆவேசமாக பேசிய குஷ்பு

அதற்கு அந்த நெட்டிசன் உங்கள் கணவரின் பணத்தை காப்பாற்றுவதற்காகவே நீங்கள் பாஜகவில் இணைந்து இருக்கிறீர்கள் என்று கூறியிருந்தார். இதனால் கோபமடைந்த குஷ்பூ, மோசமான ஒரு வார்த்தையை கூறி உங்கள் தொழிலை காப்பாற்றுவதற்காக உங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருக்கலாம். வெட்கம் கெட்ட மனிதர்கள் என்று ரிப்ளை செய்திருந்தார்.

இதுதான் தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது தன்னை பற்றி ஒருவர் தவறாக கூறினால் உடனே பொங்கிக் கொண்டு வரும் குஷ்பூ அடுத்த வீட்டு பெண்களை இப்படி மோசமாக விமர்சிக்கலாமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் இப்போது திமுகவைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் குஷ்பூ குறித்து கேவலமாக பேசி இருந்தார்.

Also read: கொழுந்து விட்டு எரியும் மல்யுத்த போராட்டம்.. நியாய தர்மத்தை ஓரம் கட்டி கூலாக திரியும் குஷ்பூ

இதனால் ஆவேசமடைந்த குஷ்பூ இது குறித்து புகார் அளித்திருந்தார். இதனால் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து குஷ்பூ பத்திரிக்கையாளர்கள் முன்பு காரசாரமாக பேட்டியும் அளித்திருந்தார். அதில் பெண்ணியத்தைப் பற்றி பல விஷயங்களையும் அவர் கூறினார்.

kushboo-tweet
kushboo-tweet

இதைப் பார்க்கும்போது உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று தான் கேட்க தோன்றுகிறது. ஏனென்றால் தன்னை யாரும் விமர்சிக்க கூடாது என்று நினைக்கும் குஷ்பூ சம்பந்தம் இல்லாத அடுத்த வீட்டு பெண்களை விமர்சிப்பது எந்த அளவுக்கு நியாயம். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் இவர் இப்படி நடந்து கொண்டது கடும் கண்டனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: ஒரே வருடத்தில் 10 படங்களில் நடித்த குஷ்பூ.. எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டச்சே

Trending News