சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

தடுப்பூசி போட்ட ரேஷன் கார்டு.. சர்ச்சையான பதிவு வெளியிட்ட பிரபலம் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்

தமிழ்நாட்டில் கொரோனா  2  அலை படு தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒரு பக்கம் மருத்துவமனைகளின் படுக்கை அறைகள் மற்றொரு பக்கம் ஆக்ஸிஜன் என அனைத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 ஆனால் தொடர்ந்து  கொரோனா தொற்று குறைந்தபாடு இல்லை. அதனால் தமிழக அரசு ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்திற்கும் மூல ஊரடங்கு பிறப்பித்தது.

 சமீபகாலமாக பல பிரபலங்களும் தங்கள் மனதில் தோன்றியதை வெளிப்படையாக கூறி வருகின்றனர். அப்படி குஷ்பு அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்து ஒன்று பரிசு பெற்றுள்ளார். அது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

kushboo
kushboo

 அதாவது பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கின்றனர் அதற்கு ஒரே வழி தடுப்பூசி போட்ட கொண்டவர்களின் விவரங்களை ரேஷன் கார்டில் பதிவிட்டால்  அவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள்  வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

 இதற்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் அதற்கு காரணம் காலமாக பலரும் வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் எந்த ஒரு தொழிலும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

ரேஷன் கடையில்  கொடுக்கும்  உணவு  பொருட்களை வைத்துதான் ஒரு சில குடும்பங்கள் சாப்பிட்டு வரும் நிலையில் குஷ்பு இந்த மாதிரி பதிவிடுவது சரியில்லை என பல தரப்பினரும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

Trending News