80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. நடிகைகள் என்றால் ஸ்லிம்மாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை மாற்றி சற்று கொழுக் மொழுக் என இருந்தாலும் திரையுலகில் சாதிக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர் தான் குஷ்பு. இவரது அழகுக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த குஷ்பூ ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தார். அவர் நடித்த படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றன. ஒருகட்டத்தில் நடிகருக்காக அல்லாமல் குஷ்புகாகவே படம் பார்க்க சென்ற ரசிகர்களும் உருவாகினர். அந்த அளவிற்கு இவருக்கு மார்க்கெட் இருந்தது.
தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை குஷ்பூ தனது உடல் எடையையும் குறைத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது மகள்கள் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “எனது மகள்கள் இருவரும் தளபதி விஜய்யின் மிகவும் தீவிரமான ரசிகர்கள். நடிகர் விஜய் நடிக்கும் படம் வெளியாகும் அன்று அந்த படத்தின் சட்டையை அணிந்து தான் திரையரங்கிற்கு செல்வார்கள்.
நான் ஒருநாள் தளபதி விஜய்யை பார்க்க எனது மகள்களை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அவர்கள் இருவரும் விஜய்யை பார்த்ததும் வெட்கப்பட்டு என் பின்னால் ஒளிந்து கொண்டார்கள் என கூறியுள்ளார். நடிகை குஷ்புவின் மகள்கள் விஜயின் தீவிர ரசிகைகள் என்பதை அறிந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.