தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ஒரு காலத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தன. அப்போதெல்லாம் பல இயக்குனர்களுக்கு குஷ்பூ வைத்து படங்களை எடுப்பதற்கு வரிசைகட்டி நின்றிருந்தனர். அந்த அளவிற்கு குஷ்பு ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.
அதுமட்டுமில்லாமல் குஷ்பூ நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இதுவே அவர் திரைத்துறையில் நீண்ட படங்கள் நடிப்பதற்கு காரணமாக அமைந்தது. நடிகைகள் பொறுத்தவரை எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதைத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால் அதை அப்படியே மாற்றியவர் குஷ்பு.
குஷ்புவின் குண்டான உடல் அமைப்பும் கொழுகொழு கன்னங்கள் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதனால் குஷ்புவும் தனது உடல் இடையில் கவனம் செலுத்தாமல் படங்களில் நடித்து வெற்றி கண்டார். ஆனால் காலம் அனைவருக்கும் ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்பது போலதான் குஷ்புவுக்கும் அந்த மாற்றத்தை கொடுத்து.
தொடர்ந்து கதாநாயகியாக படங்களில் நடித்து வந்த குஷ்புவுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சினிமா விட்டு விலகி படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது வரை தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் படங்கள் அனைத்துமே குஷ்புதான் தயாரித்து வருகிறார்.
ஆனால் சமீபகாலமாக குஷ்பு தனது உடல் எடையில் கவனம் செலுத்தி தற்போது முழுவதுமாக உடல் எடையை குறைத்துள்ளார். இதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம குஷ்பு இவ்வளவு ஒல்லியாக மாறிவிட்டார் என ஆச்சரியமாக உள்ளனர். ஸ்லிம்மாக ஜீன்ஸில் வலம்வரும் குஷ்புவை பார்த்து சின்ன தம்பி நந்தினியை போல் இருக்கிறீர்கள் என்று பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
மேலும் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் குண்டாக இருந்தால்தான் அழகாக இருக்கிறீர்கள் எனவும் கூறி வருகின்றனர். வயதானால் அனைவருக்கும் முகத்தில் முதிர்ச்சியான மாற்றம் காணப்படும் ஆனால் குஷ்பு பல வருடங்கள் ஆகியும் தற்போது வரை சின்னப் பெண்ணாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.