செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

டீ-சர்ட்டில் போட்டோ போட்ட குஷ்பூ.. ஜொள்ளு விட்ட பிரபல நடிகர்

அந்தக் கால அளவை குஷ்பு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். மேலும் குஷ்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் இளமை காலத்திற்கு திரும்பி வருகிறார்.

குஷ்புக்கு கோயில் கட்டி கும்பிடும் பசங்க எல்லாம் நம்ம ஊரில் உண்டு. அந்த அளவுக்கு குஷ்புவின் தாக்கம் தமிழ்நாட்டில் ஜாஸ்தி. சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தனக்கென தனி ஒரு இடம் பிடித்து சாதனைப் பெண்மணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குஷ்புவுக்கு அரசியல் அப்படி இப்படி இருந்தாலும் சினிமாவில் இன்னமும் கெத்தாக தான் இருந்து வருகிறார். ஒரு பக்கம் படத்தயாரிப்பு சீரியல் தயாரிப்பு என பிஸியாக இருக்கும் குஷ்பு இன்னொரு பக்கம் படங்களில் நடிக்கவும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் நடிக்க தூதுவிட்டு கொண்டிருக்கிறாராம்.

khushboo
khushboo

கடந்த ஊரடங்கு சமயத்தில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து குஷ்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு மாடர்ன் உடையில் மஜாவாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் குஷ்பு.

premji amaran
premji amaran

அந்த புகைப்படங்களை பார்த்த பிரேம்ஜி அமரன் ஜொள்ளு விடுவதுபோல் எமோஜி வெளியிட்டு தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதை பார்த்து குஷ்பு வெட்கப் படுவது போலவும் ஒரு பதிவை போட்டுள்ளார். சமீப காலமாகவே பிரேம்ஜி ட்விட்டரில் எந்த நடிகை புகைப்படம் வெளியிட்டாலும் அதை பார்த்து வழிவது போல் கமெண்ட் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News