வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

குஷ்புவின் புகைப்படத்தை பார்த்து நக்கல் அடித்த ரசிகர்.. வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொண்ட ரசிகர்

90 -களில் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம்வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் தமிழில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவருக்காக தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டியதெல்லாம் வேற லெவல். இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி -யை திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில்தான் இவரது மூத்த மகள் பட்டப்படிப்பை முடித்தார். தமிழில் நாயகியாக அறிமுகமாகும் முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் குஷ்பூ. அதுமட்டுமல்லாமல் ஹிந்தியில் 1980லிருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்த இவர் இதுவரை பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அரசியலிலும் தீவிர செயல்பாட்டாளரான இவர் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார். சமீபத்தில், தனது சமூக வலைதளத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த புகைப்படத்தில் உடல் எடையை வெகுவாகக் குறைத்து 20 வயது பெண் போல் தோற்றமளிக்கிறார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக, பிரபலங்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில், ரசிகர் ஒருவர் இந்த காலத்தில் போட்டோஷாப் மூலம் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இந்த போட்டோ ஒரு உதாரணம் என்றார்.

kushboo-photo
kushboo-photo

இதற்கு பதலித்த குஷ்பூ, ‘சில முட்டாள்கள் எப்படி எதிர்மறை மற்றும் தாழ்வு மனப்பான்மையால் நிரப்பப்பட்டுள்ளனர் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்’. உங்களை நினைத்து வருத்தப்படுகிறேன் என கூறியுள்ளார்.

Trending News