தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகைதான் நடிகை குஷ்பூ. இவருடைய அழகாலும் வசீகரா நடிப்பாலும் மயங்கிய ரசிகர்கள் இவருக்கு கோயில் கட்டி இந்திய சினிமா நடிகைகளையே வியப்பில் ஆழ்த்தினர். நீண்ட நாட்களாக சின்னத்திரையில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய குஷ்பூ, சீரியல்களையும் தயாரித்து நடித்துக்கொண்டிருந்தார்.
ஒருபுறம் நடிப்பு மற்றொருபுறம் அரசியல் என பிஸியாக வலம் வந்துகொண்டிருந்த குஷ்பூ, நீண்ட நாட்களாக உடல் பருமனால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அதன்பிறகு தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் கொண்டு, ரஜினியின் அண்ணாத்த, அரண்மனை3 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் எடையை குறைப்பதற்காகவே தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு சுமார் 18 கிலோ வரை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இவருடைய தற்போதைய தோற்றம் இளம் நடிகைகளை வியப்பில் ஆழ்த்துகிறது.
எனவே குஷ்பூ எவ்வாறு உடல் எடையை குறைத்துள்ளார் என்பது பற்றிய ரகசியம் தற்போது வெளிப்பட்டுள்ளது. அதன்படி குஷ்பூ தினம்தோறும் நடைப்பயிற்சியில் மூலம் தான் உடல் எடையை குறைப்பதாக தெரியவந்துள்ளது.
இதை அவரே ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் தினமும் நடைப்பயிற்சி செய்தால், உடல் எடை வேகமாக குறைவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் பெறலாம் என்று குஷ்பூ கூறியுள்ளார்.

இவரைப்போலவே சின்னத்தம்பி படத்தில் குஷ்புவுக்கு கதாநாயகனாக நடித்த பிரபுவும் திடீரென்று தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி குஷ்புவை போலவே திரை உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எனவே குஷ்பு-பிரபு இவர்களின் காம்பினேஷனில் சின்னத்தம்பி2 திரைப்படம் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.