வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஆன்லைனில் பட்டப்படிப்பை முடித்த குஷ்புவின் மகள்.. வைரலாகும் புகைப்படம்

நடிகை குஷ்பூ 1970ல் மஹாராஷ்டிராவில் பிறந்தார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை 2000 ஆம் ஆண்டு மணந்தார். தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் திமுக-வில் இணைந்து பணியாற்றிய அவர் பின்னர் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயம் பாஜகவில் இணைந்த அவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது மகள்களின் படங்களையும் பதிவேற்றி வந்தார். குஷ்பூ- சுந்தர் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் தனது மூத்த மகள் அவந்திகா புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், தனது மகள் பட்டப்படிப்பை முடித்துவிட்டார் என பெருமையாக கூறியுள்ளார்.

kushbu-daughter
kushbu-daughter

படத்தை பதிவிட்டதுடன், என் மகள் பட்டம் பெற்று விட்டாள். அவள் என் வயிற்றில் இருந்தது இப்போது நான் நினைத்து பார்க்கிறேன். இப்போது அவள் பெரிய பெண்ணாகி நல்ல விதத்தில் பட்டம் பெற்று எங்களை பெருமை படுத்திவிட்டாள். மேலும், நீ ஒரு புதிய உலகில் இனிமேல் அடியெடுத்து வைக்கப்போகிறாய். நீ ஒரு வலிமையான பெண் என்று எங்களுக்குத் தெரியும் என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

Trending News