திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அலைபாயுதே படத்தை அட்ட காப்பி அடித்திருக்கும் குஷி பட டிரைலர்.. விஜய் தேவர கொண்டா, சமந்தா அல்டிமேட் ரொமான்ஸ்

Kushi Movie Trailer: ஷிவா நிர்வாண இயக்கத்தில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கும் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதை பார்த்தால் அப்படியே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு அலைபாயுதே படத்தில் ஷாலினி, மாதவன் எப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்களோ, அதே போலவே தான் குஷி படத்திலும் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

Also Read: சரவெடி இல்ல இது பிஜிலி பட்டாசு.. விஜய் தேவரகொண்டாவின் லைகர் விமர்சனம்

முதலில் காஷ்மீரில் இருக்கும் சமந்தா, தன்னுடைய பெயர் பேகம் என்றும் முஸ்லிம் பெண் என்றும் தன்னை அடையாளப்படுத்துகிறார். ஆனால் மதத்தை எல்லாம் கடந்து விஜய் தேவரகொண்டா அவரை காதலிக்கிறார். கடைசியில் அவர், ‘பேகம் இல்லை பிராமின்’ என்பதை போட்டு உடைக்கிறார்.

ஆனால் இவர்களது காதலுக்கு குடும்பம் ரெட் சிக்னல் காட்டியதால் அவர்களை எல்லாம் எதிர்த்து திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ முடிவெடுக்கின்றனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு எலியும் பூனையும் மாதிரி சண்டை போடுவதை பார்க்கும் போது அப்படியே அலைபாயுதே படத்தில் மாதவன், ஷாலினியை பார்ப்பது போலவே தெரிகிறது.

Also Read: விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் புது லவ் மேஜிக்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த குஷி போஸ்டர்

இருப்பினும் இந்த படத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் க்யூட் காதல் ரொமான்ஸ் காட்சிகள் அல்டிமேட் ஆக இருக்கிறது. இதனால் விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

குஷி படத்தின் டிரைலர் இதோ!

Also Read: ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அசிங்கப்படுத்திய தமன்னா.. இனி உங்களுக்கு வாய்ப்பு இல்ல அம்மணி

Trending News