திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கொரோனாவுக்கு பின் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் குஷ்பு.. வெளியான லேட்டஸ்ட் போட்டோ

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை என்பதையும் தாண்டி தற்போது தயாரிப்பு, அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்தவர் நடிகை குஷ்பு. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் நடிகைகள் ஒல்லியாக இருந்தால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்த ட்ரெண்டை மாற்றிய ஒரே நடிகை குஷ்பு. சற்று பூசிய உடலுடன், பப்லியாக இருந்த இவரை தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால்தான் ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு சென்றனர்.

மேலும் சினிமாவில் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவருக்கு சின்னத்தம்பி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

சமீபத்தில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து குஷ்பு சற்று குண்டாக இருந்த தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்.

பல முயற்சிகளுக்குப் பின்னர் குஷ்பு தற்போது தன் உடல் எடையை முற்றிலும் குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்த போட்டோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆனது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோக்களை ஷேர் செய்து வரும் குஷ்பு தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

kushpoo
kushpoo

அதில் அவர் கொரோனா பாதிப்புக்கு பிறகு மீண்டும் தன்னுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அனைவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வொர்க் அவுட் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

kushboo-2
kushboo-2

Trending News