ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மீண்டும் கேங்ஸ்டர் படத்தில் கலக்க வரும் குட்டி பவானி.. வெறித்தனமாக வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!

கடந்த பொங்கல் அன்று விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிகர் மகேந்திரன் நடித்து அசத்தியிருந்தார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் மகேந்திரனுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மகேந்திரன் தற்போது புதிதாக கேங்ஸ்டர் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அமிகோ கேரேஜ் என பெயரிடப்பட்டுள்ள கேங்ஸ்டர் படத்தை அறிமுக இயக்குனரான பிரசாந்த் நாகராஜன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. ஒரு கேரேஜை சுற்றியே படத்தின் கதை அமைந்துள்ளதால் படத்திற்கு இந்த பெயரை வைத்துள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்.

இந்த படத்தில் மகேந்திரன் சந்தோஷமான, அதிர்ஷ்டமான இளைஞராக நடிக்க உள்ளார். இதில் ஜிஎம் சுந்தரும் முக்கிய ரோலில் நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த புதுமுகமான ஆதிரா, மகேந்திரனுக்கு ஜோடியாக நடிக்கிறார். கனா, ஆர்கே நகர் படங்களில் நடித்த தசர்தியும் நடிக்கிறார்.

படத்தின் ஷுட்டிங் ஓசூர் மற்றும் சென்னையில் நடக்க உள்ளது. இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் சினிமா மீதுள்ள தீராத காதல் காரணமாக தான் பார்த்துக் கொண்டிருந்த ஐடி வேலையை விட்டு விட்டு படம் இயக்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

master mahendran
master mahendran

Trending News