ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சூர்யாவுக்காக கடைசியாக கதை எழுதியிருந்த கே வி ஆனந்த்.. ஹாலிவுட் லெவல் கதையை மிஸ் செய்த சூர்யா

என்டர்டேய்மெண்ட் படங்களை எடுப்பதில் கில்லாடியான கேவி ஆனந்த் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இவர் பல நடிகர்களுக்கும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

இன்று இயக்குனராக பலராலும் அறியப்பட்ட தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் புகைப்பட கலைஞராகவும் ஒளிப்பதிவாளராகவும் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்தவர்.

கடைசியாக கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதைவிட ஒரு சூப்பர் கதை ஒன்றை சூர்யாவுக்காக எழுதி வைத்திருந்தாராம் கே வி ஆனந்த்.

அதுவும் மார்வெல் ரேஞ்சுக்கு சூப்பர் ஹீரோ கதையாம். பிரமாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என திட்டமிட்டு இருந்தாராம்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் மரணமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சூர்யாவுக்கு மட்டுமல்லாமல் சிம்புவுக்கும் ஒரு கதை எழுதி வைத்திருந்தார் என்பதை அவரே தன்னுடைய அறிக்கை மூலம் வெளியிட்டிருந்தார்.

சூர்யாவை சினிமாவுக்கு புகைப்படத்தின் மூலம் அறிமுகமாக்கியது இவர்தான். அதேபோல் சூர்யாவுக்காக இவர் கொடுத்த அயன் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதை மறக்க முடியுமா.

suriya-kv-anand-cinemapettai
suriya-kv-anand-cinemapettai

Trending News