தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் மிகவும் குறுகிய காலத்திலேயே உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே. இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தன. ஆனால் ஏனோ தெரியவில்லை சமீபகாலமாகவே இவரது படங்கள் சுமாரான வெற்றியையே பெற்று வருகின்றன.
கால்ஷீட் டைரி நிறையும் அளவிற்கு அதிகமான படங்களில் தன்னை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள விஜய் சேதுபதி ஏனோ கதைகளை தேர்வு செய்வதில் கோட்டை விட்டு விடுகிறார் போலும். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியான லாபம் மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் தோல்வியையே சந்தித்துள்ளன.
கொரோனா நோய் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 50% இருக்கைகளுடன் சமீபத்தில் திறக்கப்பட்டது. முன்னதாக ஓடிடியில் லாபம் படத்தை வெளியிட முடிவு செய்திருந்த படக்குழுவினர் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் படத்தை தியேட்டரில் வெளியிட்டனர்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி படம் என்பதாலும், விஜய் சேதுபதி நடித்திருந்ததாலும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. படம் வெளியான நாள் முதல் தற்போது வரை வெறும் 6 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாம்.
இவ்வளவு குறைவான வசூல் காரணமாக போட்ட போட்ட பணத்தைக் கூட எடுக்க முடியவில்லையாம். மேலும் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இனியாவது விஜய் சேதுபதி கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.