ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

திறமை இல்லையெனில் தூக்கி எறியுங்கள்.. இளம் வீரர் மீது பாயும் கௌதம் கம்பீர்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் 2வது டெஸ்ட்போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் தோல்வியின் விளிம்பில் தத்தளித்து வருகிறது இந்திய அணி. இதற்கு முக்கியமான காரணம் இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியது தான். கே எல் ராகுல், மயங்க் அகர்வால் முதலாவதாக இறங்கி ஓரளவு கை கொடுத்தாலும்.

மற்ற வீரர்களின் பங்களிப்பு படுமோசமாக உள்ளது. புஜாரா மற்றும் ரகானே போன்ற டெஸ்ட் ஜாம்பவான்கள் கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர. இருவரும் சதங்கள் அடித்து பல வருடங்கள் ஆகியுள்ளது.

இருந்தாலும் தொடர்ந்து அணியில் இடம் பிடித்து வருகின்றனர். அதற்கு காரணம் பல வீரர்கள் காயத்தின் காரணமாக அணியில் இடம் பெறாதது தான். மூத்த வீரர்கள் தான் அப்படி என்றால் அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய இளம் வீரரான ரிஷப் பண்ட் மீண்டும், மீண்டும் சொதப்பி வருகிறார்.

முக்கியமான கட்டங்களில் இறங்கி விளையாடும் அவர் பொறுப்புடன் விளையாடுவதில்லை என பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், ரிஷப் பந்த் சிறுபிள்ளைத்தனமாக விளையாடுவதும், ஒரு போட்டியை எப்படி கணித்து விளையாடுவது என்று தெரியாமல் ஆடுவதும் வியப்பாக இருக்கிறது.

அவர் தனது முழு திறமையை காட்டவில்லை, தயவுசெய்து அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என குற்றம் சாட்டியுள்ளார். தோனியின் இடத்திற்கு எடுக்கப்பட்ட வீரர் இவ்வாறு செயல்படுவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News