திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

அச்சு அசல் விஜய் சேதுபதியாக மாறிய இளம்பெண்..

தனது எதார்த்தமான நடிப்பாலும் திறமையாலும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கைவசம் ஏராளமான படங்களை விஜய் சேதுபதி வைத்துள்ளார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது விக்ரம், துக்ளக் தர்பார், மாமனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

கொஞ்சம் கூட இமேஜ் பார்க்காமல் தன்னை தேடி வரும் ஹீரோ, வில்லன், வயதானவர் என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று மிகவும் கச்சிதமாக நடித்து அனைவரது பாராட்டையும் தட்டி செல்கிறார்.

தற்போது முன்னணி தொலைக்காட்சியில் சமையல் நிகழ்சியை தொகுத்து வழங்கவுள்ள விஜய் சேதுபதி, ஃபேமிலி மேன் வெப் சிரீஸ் இயக்குநர்களின் புதிய வெப் சீரிஸிலும் நடிக்கவுள்ளார்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான உப்பென்னா படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து விஜய் சேதுபதிக்கு தெலுங்கிலும் மார்க்கெட் எகிறி உள்ளது.

இந்நிலையில் இளம் பெண் ஒருவர், விஜய் சேதுபதியை போன்றே மேக்கப் போட்டு, அச்சு அசலாக விஜய் சேதுபதியாகவே மாறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News