திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நீங்க இல்லன்னா என்னால பிழைக்க முடியாதா.. ஷாருக்கானை நம்பி புது கணக்கு போடும் நயன்தாரா

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கும்போது தன்னுடைய காதல் கணவரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன், காதல் காட்சிகள் மற்றும் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்தால் நயன்தாரா.

திருமணத்திற்கு பிறகும் நயன்தாராவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும், அவர் பெயர் கெடும்படி அடுத்தடுத்து நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. திருமணத்திற்கு முன்பே இவர் குழந்தைகளுக்காக சரகசி முறையை நாடியது ரசிகர்களிடையே பேசு பொருள் ஆனதோடு, நயன்தாரா மீது ரசிகர்களுக்கு ஒரு வெறுப்பு உணர்வு ஏற்பட்டுவிட்டது.

Also Read: கடைசி வரை நயன்தாராவை வைத்து விளையாட்டு காட்டிய விக்னேஷ் சிவன்.. உச்சக்கட்ட பிபி-யில் விரட்டிய அஜித்

திருமணத்திற்கு முன்பு நடிகை நயன்தாரா ஒப்பந்தமான ஜவான் திரைப்படத்தில் தான் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருடைய புது படங்கள் பற்றி எந்த அறிவிப்புகளுமே இல்லை. தளபதி 67, AK 62 போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை.

இதற்கிடையில் தனக்கு மார்க்கெட் குறைவதற்குள் எப்படியாவது தன்னுடைய கணவரை டாப் இயக்குனர் ஆக்கி விட வேண்டும் என்று நயன்தாரா பெரிதும் ஆசைப்பட்டார். ஏ கே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவனை நடிகர் அஜித்குமார் நீக்கியதிலிருந்து விக்னேஷ் சிவனின் பெயரும் கொஞ்சம் டேமேஜ் ஆக ஆரம்பித்துவிட்டது.

Also Read: மோசமான ஆட்டிட்யூடால் பல வாய்ப்புகளை இழந்த விக்னேஷ் சிவன்.. பதறி ஓடிய முதலாளி

தற்போது ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய நயன்தாராவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடிகர் ஷாருக்கான் நயன்தாரா வீட்டிற்கு சென்று அவருடைய குழந்தைகளை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார். இது நயன்தாராவுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தற்போது நயன்தாரா ஷாருக்கானை வைத்து மிகப்பெரிய பிளான் போட்டிருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லை என்றால் ஷாருக்கானை வைத்து பாலிவுட்டுக்கு சென்று விடலாம் என்றும்,மேலும் ஷாருக்கான் மூலம் தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கும் வாய்ப்புகள் வாங்கி படம் இயக்க வைக்கலாம் என்றும் திட்டம் போட்டிருக்கிறார். நயன்தாரா போடும் இந்த புது கணக்கு எங்க போய் முடிய போகுது என்று தெரியவில்லை என பிரபலங்கள் பேசி வருகின்றனர்.

Also Read: போனது போச்சுன்னு தாஜா பண்ணிய விக்னேஷ் சிவன்.. சோலி மொத்தத்தையும் இழுத்து மூடுன லைக்கா

Trending News