திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சுந்தர் சி பண்ண வேலை.. சூர்யா45 படத்தில் கூட்டாளி நடிகையை கூட்டிவந்த ஆர்.ஜே.பாலாஜி

சூர்யா 45 படத்தைப் பற்றி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இப்படத்தின் ஹீரோயின் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகிறது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நட்டி, பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்ளி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படம் ரூ.2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் சமீபத்தில் கூறிய நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பர்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

ரூ.300 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில், 38 மொழிகளில் 3 டி தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர், டீசர் வெளியான நிலையில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது. எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பின் சூர்யாவின் படம் தியேட்டரில் ரிலீஸாகி அது வெற்றி பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. எனவே கங்குவா பிரமாண்ட வெற்றி பெரும் ரசிகர்கள் கருதுகிறார்கள்.

சூர்யா 45

கங்குவா படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே சூர்யா 44 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோல் சூர்யா 44 படம் நடந்து கொண்டிருக்கும்போதே சூர்யா45 படத்தை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இதுகுறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரும் வெளியானது.

இந்தப் படத்தின் லோகேஷ் தேடும் பணியில் ஆர்.ஜே.பாலாஜி ஈடுபட்டுள்ள நிலையில் இப்படத்தின் ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவுக்கு ஜோடியாக சிவப்பு மஞ்சள் பச்சை படத்திலும், பிடி சார் படத்திலும் நடித்த காஷ்மிரா இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இப்படத்தின் கதை மற்றும் ஹீரோயினை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் ஹிட்டானது. இப்படத்தின் 2 வது பாகத்திலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்குனராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுந்தர்.சி இயக்குனர் என அறிவிப்பு வெளியானது.

வாய்ப்பு கிடைக்காததால் கடுப்பான பாலாஜி இப்படத்திற்குப் போட்டியாக திரிஷா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி மாசாணி அம்மன் படத்தை இயக்க ஆர்.ஜே.பாலாஜி முடிவெடுத்ததாக கூறப்பட்டது.

திரிஷாவின் கால்ஷுட் கிடைக்காத நிலையில், இப்படத்தை ஹீரோ சப்ஜெக்ட்டாகவும், மாசாணி அம்மன் கதையை ஆண் தெய்வத்தின் கதையாக ஆர்.ஜே.பாலாஜி மாற்றி அதை சூர்யாவுக்கு ஏற்றபடி மாஸாக அதிரடி ஆக்சன் கலந்து உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதில், மூக்கு அம்மன் படத்தின் நடித்த நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எனவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Trending News