புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அஜித்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் லைக்கா.. இம்ப்ரஸ் செய்ய கோடிகளை வாரி இறைக்கும் முதலாளி

அஜித் நடித்து முடித்துள்ள துணிவு திரைப்படத்தை போனி கபூர் இயக்கியுள்ளார். வரும் பொங்கலுக்கு வெளியாகும் இந்த திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. அதைத்தொடர்ந்து ஓவர்சீஸ் வெளியிட்டு உரிமையை லைக்கா பெற்றுள்ளது.

அதனால் இந்த திரைப்படத்தின் பிரமோஷனை லைக்கா பிரம்மாண்டமாக செய்து வருகிறது. அந்த வகையில் வரும் 31ஆம் தேதி துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை லைக்கா நிறுவனம் துபாயில் வித்தியாசமான முறையில் ப்ரமோஷன் செய்திருக்கிறது.

Also read: வாரிசு, துணிவை விட இந்த படங்களுக்கு தான் எதிர்பார்ப்பு ஜாஸ்தியா.. 2023-னின் ஆரம்பத்திலேயே ரணகளமாகும் இணையதளம்

அதாவது ஒருவர் வானத்தில் பாராசூட்டில் பறந்தபடியே துணிவு பேனரை விளம்பரம் செய்துள்ளார். இதற்காக மட்டுமே லைக்கா நிறுவனம் கிட்டத்தட்ட 35 கோடிக்கு மேல் செலவு செய்திருக்கிறதாம். இது வைரலான நிலையில் தற்போது ட்ரெய்லரையும் யாரும் எதிர்பார்க்காத அளவில் வெளியிடுவதற்கு லைக்கா பரபரப்பாக வேலை செய்து வருகிறது.

அந்த வகையில் டிசம்பர் 31 இரவு துணிவு படத்தின் ட்ரெய்லரை உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புஜ்ஜி கலிபாவில் வெளியிடுவதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இதற்கான செலவு மட்டுமே 100 கோடியை நெருங்கி இருக்கிறது. இவை எல்லாவற்றையும் தயாரிப்பாளர் போனி கபூரோ, அஜித்தோ செய்ய சொல்லவில்லை. ஆனாலும் லைக்கா நிறுவனம் சொந்த விருப்பத்தின் பேரில் இப்படி பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறது.

Also read: யுனிவர்சல் கூட்டணிக்காக அஜித்தை டீலில் விட்ட த்ரிஷா.. இயக்குனர் மேல் இருக்கும் அவநம்பிக்கை

லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் இப்படி மெனக்கெடுவது போனி கபூருக்காக கிடையாது. அவர் அஜித்தை இம்ப்ரஸ் செய்து இதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளை பெறுவதற்காக தான் இப்படி தீயாக வேலை செய்து வருகிறாராம். துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருப்பது நம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

விக்னேஷ் சிவன் இயக்கும் அந்த திரைப்படம் அடுத்த வருடம் தொடங்கப்பட இருக்கிறது. அந்த படத்திற்கு பிறகும் அஜித்தை வைத்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை தயாரிக்க லைக்கா திட்டமிட்டு இருக்கிறதாம். அதனால் தான் தயாரிப்பாளர் அஜித்துக்கு பிடித்தது போன்று ஒவ்வொன்றையும் செய்து அவரை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கிறாராம். அவருடைய இந்த முயற்சிக்கு அஜித்திடம் இருந்து சாதகமான பதில் வருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: மணி ஹீஸ்டை நம்பி கோடிகளை செலவழித்த நெட்பிளிக்ஸ்.. துணிவு படத்தின் ஓடிடி ரைட்ஸ் எவ்வளவு தெரியுமா?

Trending News