வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

லட்சுமிமேனனுக்கு இப்படி ஒரு நோயா.? மிரட்டலான த்ரில்லர் படத்தின் வைரல் போஸ்டர்

தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் அறிமுகமான முதல் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து பல படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன.

அதனைத் தொடர்ந்து பல படங்கள் நடித்தார். இருப்பினும் ஒரு சில படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் புலிகுத்தி பாண்டி. இப்படம் நேரடியாக சன் டிவியில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

லட்சுமி மேனன் ஏஜிபி என்னும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் லட்சுமி மேனன் ஸ்கிசோஃப்ரினியா எனும் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார்.

agp
agp

அதாவது ஸ்கிசோஃப்ரினியா நோய் பார்வை, கேட்கும் திறன், சுவை, நுகர்தல் மற்றும் உணர்ச்சி திறன் இந்த 5 உணர்வுகளையும் பாதிக்கும். மேலும் கோபத்தில் பேசுதல் மற்றும் எதையோ ஒன்று நினைத்தல் போன்றவை அடிக்கடி நினைவிற்கு வந்து போகும். ஸ்கிசோஃப்ரினியா நோய்க்கு இன்று வரை எந்த ஒரு ஆய்வுக்கூடம் இல்லை.

மேலும் நோயாளியின் மூளையில் மெசோனிம்பிக் பாதையில் டோபமைன் அதிக அளவில் சுரப்பது இந்த நோய் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த நோயால் பாதித்தவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாது நீண்டகாலமாக உணர்ச்சிகளையும் பாதிக்கும். தற்போது லட்சுமி மேனன் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இப்படத்தில் நடித்துள்ளார். கூடிய விரைவில் இப்படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்

Trending News