வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அவனோட அதை அறுத்து விடனும்.. கொந்தளித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

சமூக பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் நடைபெற்ற பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து காட்டமான பதில் தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் அதற்கு முன்பே சினிமாவில் நடிகையாக இயக்குனராகவும் வலம் வந்தார்.

இருந்தாலும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான் அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பே ஏற்படுத்திக் கொடுத்தது. அதிலும் இவருடைய காரசாரமான விவாதங்கள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது.

இவ்வளவு ஏன் கடந்த வருடம் கூட நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்தில் தலையிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டார். இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

lakshmi-ramakrishnan-cinemapettai-00
lakshmi-ramakrishnan-cinemapettai-00

அந்த வகையில் தமிழ் நாட்டையே உலுக்கிய பிரச்சனைதான் பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டது. அந்த புகாரை தொடர்ந்து சென்னையில் உள்ள பல பள்ளிகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் எல்லை மீறினால் அவர்களுடைய உறுப்பை அறுத்து விடவேண்டும். இது இப்போது மட்டுமல்ல. எனக்கும் நடந்துள்ளது, என்னுடைய சகோதரிகளுக்கும் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

lakshmi-ramakrishnan-cinemapettai
lakshmi-ramakrishnan-cinemapettai

Trending News