நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் நடிகைகளிடம் ரசிகர்கள் அத்துமீறி பேசி வருவது வாடிக்கையாகி விட்டது. என்னதான் நடிகைகள் பதிலடி கொடுத்தாலும் ஒரு சில ரசிகர்கள் மட்டும் அந்த பழக்கத்தை கைவிடுவதே இல்லை.
தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதிலேயே மளமளவென முன்னணி ஹீரோயினாக வளர்ந்தவர் தான் லட்சுமிமேனன். சீக்கிரம் முன்னேறி விட்டோம் என்ற பூரிப்பில் உடல் எடையும் கூடி விட்டது. இதனால் பள்ளி பருவ வயதிலேயே பார்ப்பதற்கு ஆன்ட்டி போலானார்.
அதேசமயம் வரிசையாக ஒரு சில படங்கள் தோல்வியை சந்திக்க, படிப்பை முடித்துவிட்டு வருகிறேன் என மொத்தமாக முழுக்கு போட்டு விட்டு கிளம்பிவிட்டார். அதன்பிறகு லட்சுமிமேனன் சினிமாவுக்கு வர மாட்டார் என பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்போது புலிக்குத்தி பாண்டி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் லட்சுமி மேனனை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். அதிலும் புலிக்குத்தி பாண்டி கிளைமேக்ஸில் வில்லனை பிளான் பண்ணி லட்சுமி மேனன் போட்டுத் தள்ளும் காட்சி எல்லாம் வேற லெவல்.
தற்போது அடுத்தடுத்து தமிழிலும் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளதால் ரசிகர்களுடன் ஒரு நட்பை வளர்க்க சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.
அப்போது விதண்டாவாதம் பிடித்த ரசிகர் ஒருவர் லட்சுமிமேனனிடம், கவர்ச்சி புகைப்படம் கேட்க டென்ஷனாகி விட்டார் அம்மணி. ஒரு அசிங்கமான கெட்ட வார்த்தையை பயன்படுத்தி லட்சுமி மேனன் அந்த ரசிகரை திட்டிவிட்டார். இவ்வளவு ஓபனாக பேசிவிட்டாரே என லட்சுமி மேனனைப் பார்த்து மற்ற நடிகைகள் ஆடிப் போய்விட்டார்களாம்.