புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நவரச படத்தில் இவர் நடிப்புக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்.. கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்

பிரபல இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் இணையதளத்தில் எப்போதும் பிஸியாக இருப்பவர் அவ்வபோது புதுப்புது விஷயங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது ஒரு புதிய விஷயத்தை பகிர்ந்துள்ளார் ஆகஸ்ட் மாதம் வெளியான” நவரச “என்ற ஆந்தாலஜி திரைப்படம் பற்றிய ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இயக்குனர் மணிரத்தினம் ஜெயந்திர பஞ்சாபகேசன் உடன் இணைந்து உருவாக்கிய நவரச என்னும் திரைப்படம் மெட்ராஸ் டாக்கீஸ் ,க்யூப் சினிமா டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவானது.

இதில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சூர்யா, விஜய் சேதுபதி, ரேவதி, ரோகிணி, பார்வதி, டெல்லி கணேஷ், பிரகாஷ்ராஜ் ,உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தலைப்பிற்கு ஏற்ப நவ ரசத்தையும் கொண்ட ஒன்பது கதைகளை உள்ளடக்கிய ஒரு திரைப்படம் ஆகும்.

சிரிப்பு, சினம், பயம் ,வெறுப்பு, அதிசயம், தைரியம், இரக்கம், அமைதி, அன்பு போன்ற நவ ரசத்தையும் கொண்டுள்ள திரைப்படமாக நவரச திரைப்படம் உள்ளது. இதில் “பாயாசம்” என்னும் கதை “வெறுப்பை” காட்டக்கூடிய கதையாக இருக்கிறது.

delhi ganesh
delhi ganesh

இதில் டெல்லி கணேஷ் அவர்கள் எழுபத்தி ஏழு வயது பெரியவராக நடித்திருக்கிறார். அதில் அவருடைய நடிப்பு ஈடுஇணை அற்றதாக இருக்கிறது என்றும், அவருடைய அந்த கதாபாத்திரத்திற்காக “ஆஸ்கர் விருது” வழங்க வேண்டும் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை பலர் பாயசம் கதை நன்றாக இருக்கிறது இருப்பினும் ஆஸ்கர் விருது என்பதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கலாய்த்து வருகின்றனர்.

Trending News