வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

55 வயதில் 25 வயது இளம் பெண்போல் ஸ்லிம்மாக மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன்.. மாடர்ன் உடையில் மஜா புகைப்படம்

குணச்சித்திர வேடத்தில் நடித்து அதிகம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவரது வெகுளித்தனமான கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு அம்மாவாகவும், நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.

ஆனால் படங்களில் இவர் பிரபலமானதை விட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகள் மற்றும் அதற்கு இவர் கொடுக்கும் ரியாக்சன் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை கொஞ்சம் உடல் எடை கூடியிருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த ஊரடங்கு சமயத்தில் மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை பாதியாக குறைத்து விட்டார்.

lakshmy-ramakrishnan-cinemapettai
lakshmy-ramakrishnan-cinemapettai

இப்போதும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு மாடர்ன் உடைகளில் புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

lakshmy-ramakrishnan-cinemapettai-01
lakshmy-ramakrishnan-cinemapettai-01

இந்த வயதிலும் பார்ப்பதற்கு இளமையாக இருக்கிறார் என கமெண்ட் செய்யாத ரசிகர்களே கிடையாது. இந்நிலையில் சமீபத்தில் கருப்பு நிற மாடர்ன் உடையில் கனகச்சிதமான அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் செம வைரல் ஆகியுள்ளது.

Trending News