புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிரபல விருதை வாங்க மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்.. உண்மையான காரணம் தெரியுமா.?

தமிழ் தொலைக்காட்சிகளில் ஓரளவு பிரலமான ஒரு சேனலாக வளர்ந்திருக்கும் நிறுவனம் “ஜி தமிழ்”. இந்த சேனலின் வளர்ச்சிக்கு தன் பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்காலத்தில் துணைபோனலும் சில வருடங்களுக்கு முன்பு வரை அந்த அளவிற்கு பெரும் வரவேற்பை பெற்றதற்கு காரணமாக அமைந்தது “சொல்வதெல்லாம் உண்மை ” என்கிற நிகழ்ச்சியே.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி இதற்கென தேவையான மக்கள் ஆதரவினை பெற்றுத்தந்தவர் திருமதி.லட்சுமி ராமகிருஷ்ணன். ஜி தமிழ் தவிர திரைப்பட நடிகை இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் லட்சுமி ராம்கி.

சமீப காலமாக விருது வழங்கி கவுரவிக்கும் “பிஹைண்டு உட்ஸ்”லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் ஒரு அவார்டு கொடுக்கவிருப்தாக கூறவே சட்டென அவர் அவருக்கு தெரிந்த இன்னொரு நபருக்கு அதனை தரவேண்டும் என கேட்டுக்கொண்டாராம்.

muniyamma behindwoods
muniyamma behindwoods

சிறு தயக்கங்களுடன் சம்மதித்த பிஹைண்ட் வுட்ஸ் அந்த நபரை சந்தித்ததும் கொடுப்பதற்கு தயாரானதாம். அவர் வேறு யாருமில்லை லட்சுமி ராமகிருஷ்ணன் சன் டி.வி யில் தொகுத்து வழங்கும் “நேர்கொண்ட பார்வை” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட “முனியம்மா” தான்.

வாழ்வையே பிள்ளைகளுக்காக அர்ப்பணிக்கும் அவர் தான் “கோல்டன் ஐகானிக்” எனக்கூறி அவருக்கு இந்த அவார்டை பெற்றுத்தந்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்…. உண்மையிலேயே தங்கமங்கை தான்.

Trending News