புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஐஸ்வர்யா.. லால் சலாமில் நடந்துள்ள தரமான சம்பவம்

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்து, தற்போது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிக் கொண்டிருக்கும் லால் சலாம் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் பிஸியாகிவிட்டார். சமீபத்தில் லால் சலாம் படத்தில் ரஜினியின் கெட்டப் ஆன மொய்தீன் பாய் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது.

ஆனால் அதற்கெல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாமில் ரஜினியின் விருப்பத்திற்கு ஏற்ப தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. அதாவது சூப்பர் ஸ்டார் நடிக்கும் லால் சலாம் படத்தில் ரஜினிக்கு பிடித்த ஒரு விஷயத்தை ஐஸ்வர்யா செய்திருக்கிறார்.

Also Read: ரஜினியை வைத்து பிசினஸ் செய்த தயாரிப்பாளர்கள்.. சரியான நேரத்தில் உதவிய நண்பன்

இந்த படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக இருப்பதால் இந்த படத்தில் புது முயற்சி ஆக கிரிக்கெட் வீரர் கபில்தேவ்-வை நடிக்க வைத்துள்ளார். ரஜினியுடன் கேரவனில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கபில்தேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ட்ரெண்ட்டாக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் லால் சலாம் படத்தில் எதற்காக கபில்தேவ் என்று பார்த்தால் ரஜினிக்கு கிரிக்கெட்டில் பிடித்த ஒரே கிரிக்கெட் பிளேயர் கபில்தேவ்.

அந்த அளவிற்கு வெறித்தனமான ரசிகர் ரஜினி. இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பையை வென்று வந்த கபில்தேவ், இந்திய கிரிக்கெட் கிங் ஆகவே பார்க்கப்படுகிறார். தற்போது விளம்பரங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கபில்தேவ் பல்வேறு துறைகளில் இருக்கும் பிரபலங்களை சந்தித்து வருகிறார். அதிலும் இப்போது சினிமாவில் ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போகிறார் என தெரிந்ததும் கிரிக்கெட் ரசிகர்களும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் தலைகால் புரியாமல் கொண்டாடி வருகின்றனர்.

Also Read: இதுவரை மூன்று தலைமுறையாக வெளிவந்த மொத்த படங்கள்.. எம்ஜிஆரை மிஞ்சி பேசப்பட்ட இரண்டு ஜாம்பவான்கள்

அது மட்டுமல்ல சூப்பர் ஸ்டார்க்கு தமிழகத்தில் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் அவர் கபில்தேவ்-வின் வெறித்தனமான ரசிகர். இதை தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா இந்த படத்தின் மூலம் ரஜினியுடன் கபில்தேவ்-வை நடிக்க வைத்து ரஜினிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இதனால் ரஜினி இனம் புரியாத மகிழ்ச்சியில் இருக்கிறார் மற்றும் இந்த படத்திற்காக ஐஸ்வர்யா செய்த இந்த செயல் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

முக்கியமாக ரஜினிகாந்த் இந்த படத்தில் காலா படத்தில் நடித்ததை போல ஒரு தாதாவாக நடிக்கிறார். மேலும் ரஜினி இன்னும் ஒரு சில படத்தில் மட்டுமே நடித்துவிட்டு ஓய்வெடுக்க போவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. அதனால் அவருடைய திரை பயணத்தில் லால் சலாம் மறக்க முடியாத படமாக இருக்க வேண்டும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படி ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.

Also Read: காலம் கடந்து பேசும், ரஜினியின் கடைசி இயக்குனர் இவர் தான்.. மிஷ்கின் கொடுத்த அப்டேட்டால் மிரளும் திரையுலகம்

Trending News