வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வசூல் வேட்டைக்கு தயாராகும் மொய்தீன் பாய்.. லால் சலாம் முதல் நாள் வசூல் கணிப்பு

Lal Salaam First Day Collection: ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் நாளை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வர இருக்கிறது.

விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு அவருடைய காட்சிகள் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுவே பெரும் ஆர்வத்தை தூண்டி இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்ததை விட மேலாக இருக்கிறதாம். அதில் சென்னை, மதுரை என தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் டிக்கெட் புக்கிங் அமோகமாக நடந்துள்ளது.

Also read: 32 வருஷம் பின்னாடி போகும் ரஜினி.. தலைவரை மொத்தமாக மாற்றி செதுக்கும் லோகேஷ்

இதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் அடிப்படையில் லால் சலாம் முதல் நாள் வசூல் மட்டுமே 5 கோடியை தாண்டும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது அடுத்தடுத்த நாட்களில் ஏறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டார் இதில் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் லால் சலாம் ரஜினி படமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இது படத்திற்கு கூடுதல் பலமாக இருந்த நிலையில் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் நிச்சயம் இப்படம் 100 கோடி வசூல் வேட்டையாடும் என அடித்து சொல்கின்றனர்.

Also read: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகும் 5 படங்கள்.. தலைவர் 171-ல் ரசிகர்களை உச்சி குளிர செய்ய போகும் ரஜினி

Trending News