லால் சலாம், லவ்வர் முதல் நாள் கலெக்சன்.. சூப்பர் ஸ்டாரை வைத்து கல்லா கட்ட நினைக்கும் ஐஸ்வர்யா

Lal Salaam, Lover First Day Collection : பிப்ரவரி ஒன்பதாம் தேதியான இன்று திரையரங்குகளில் லால் சலாம் மற்றும் லவ்வர் படங்கள் வெளியாகி இருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் லால் சலாம். விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட நேர சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் லால் சலாம் படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என கலந்து தான் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் லால் சலாம் முதல் நாளில் எவ்வளவு கலெக்ஷன் செய்யும் என்று தோராயமாக கூறப்படுகிறது.

அதாவது கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வகையில் லால் சலாம் படமும் இப்போது ரஜினி ரசிகர்களுக்காகவே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் முதல் நாளில் நான்கிலிருந்து கிட்டத்தட்ட 5 கோடி வரை வசூல் பெற வாய்ப்பு இருக்கிறது.

Also Read : லால் சலாம் ரிலீஸ் முடிந்த கையோடு ரஜினி வீட்டில் நடக்கப் போகும் முக்கிய நிகழ்வு.. தலைவருக்கு இருந்த பெரிய குறை

அதேபோல் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் லவ்வர். மணிகண்டனின் படங்கள் தொடர்ந்து வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கும் நல்ல விமர்சனம் தான் கிடைத்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் காதல் எவ்வாறு இருக்கிறது என்பதை இயக்குனர் வெளிக்காட்டி இருக்கிறார்.

இந்நிலையில் லால் சலாம் படத்திற்கு போட்டியாக லவ்வர் படம் வெளியானாலும் முதல் நாளில் கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் ஜெய் பீம், குட் நைட் ஆகிய படங்களை தொடர்ந்து மணிகண்டனுக்கு லவ்வர் படமும் வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : மகளைப் பார்த்து பூரித்துப் போய் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு.. லால் சலாம் வெற்றி பெறுமா.?

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்