திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முதல் நாளே பல் இளிக்கும் தியேட்டர்கள்.. சூடு பிடிக்குமா லால் சலாம்.?

Lal Salaam: சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாயாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் இன்று வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடித்துள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் ரஜினி என்ற ஒற்றை மனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனாலேயே படத்தின் ஓப்பனிங் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் குஷியாக வந்தனர்.

ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அதிலும் சில தியேட்டர்கள் கணிசமான கூட்டம் கூட இல்லாமல் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று வரை ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

Also read: லால் சலாம் ரிலீஸ் முடிந்த கையோடு ரஜினி வீட்டில் நடக்கப் போகும் முக்கிய நிகழ்வு.. தலைவருக்கு இருந்த பெரிய குறை

ஆனால் தற்போது பார்த்தால் பல தியேட்டர்களில் முதல் காட்சிக்கே காலி இருக்கைகள் தான் வரவேற்பு கொடுத்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் கதை கரு நன்றாக இருந்தாலும் அதை ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் விதம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பது தான்.

அதிலும் பல இடங்களில் வசனங்கள் சூர மொக்கையாக இருப்பதாக கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ரஜினி சில நிமிட காட்சிகள் மற்றும் ஒரு சண்டைக்காட்சியில் மட்டுமே வருகிறார்.

இதனாலயே ரசிகர்கள் இப்போது படத்தை பார்க்க பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஓடிடியில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று டீலில் விட்டு விட்டனர். இப்படியே போனால் இரண்டாம் தர நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் தான் வெளியாகும் என்ற நிலையும் ஏற்படலாம். வார இறுதியிலாவது லால் சலாம் சூடு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: Lal Salaam Movie Review- மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய்.. லால் சலாம் எப்படி இருக்கு.? விமர்சனம்

Trending News