புதன்கிழமை, ஜனவரி 8, 2025

போட்டி இல்ல போர், விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க.. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்

Lal Salaam Teaser: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் லால் சலாம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக சற்று முன் வெளியாகி இணையத்தில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த டீசரில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரின் ஆக்ரோசமான காட்சிகளும், ரஜினியின் மாஸ் என்ட்ரியும் இடம் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் லால் சலாம் படம் விளையாட்டில் மத அரசியல் இருப்பதை பேசி உள்ளதாக இந்த டீசர் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் எதிரில் அணிகளாக மோதிக் கொள்வதை இந்தியா- பாகிஸ்தான் போல பில்டப் செய்யப்படுகிறது.

Also Read: ரஜினி படத்தை தள்ளி வைத்த ரெட் ஜெயிண்ட்.. கமுக்கமாக காய் நகர்த்திய சுந்தர் சி

இதனால் இந்து- முஸ்லிம் இடையே மத கலவரம் வெடிக்க அதற்கு பஞ்சாயத்து பண்ண கேங்ஸ்டர் மொய்தீன் பாய் களம் இறங்குகிறார். இந்த டீசரில் ரஜினி, ‘விளையாட்டு மதத்தை கலந்திருக்கீங்க. குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்திருக்கிறீர், தப்பா இருக்கு!’ என்று ஆதங்கத்துடன் பேசுகிறார்.

இதில் ரஜினியின் கேரக்டர் செம ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதை படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்!

Also Read: அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் ஹீரோக்களின் 13 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் மோதும் தனுஷ்

Trending News