திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லால் சலாம் ரஜினியின் கேரியரில் முக்கிய படம்.. கதையை லீக் செய்த பயில்வான்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் லால் ஸலாம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். உண்மையான கிரிக்கெட் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணுவிஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் முன்னாள் மனைவியுமான, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தை மும்முரமாக இயக்கி வரும் நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. ரஜினிகாந்த் பல ஆண்டுகள் கழித்து சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் இப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பது தனி சிறப்பாக உள்ளது.

Also Read: லால் சலாமில் ரஜினி முஸ்லிமாக நடிக்க காரணம்.. பரபரப்பை கிளப்பிய பயில்வான்

சூப்பர்ஸ்டாரின் முந்தைய படமான பாட்ஷா திரைப்படத்தில் மாணிக் பாட்ஷாவாக நடித்த நிலையில், 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் களமிறங்கி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் லால் ஸலாம் படத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் இப்படத்தில் ரஜினி இஸ்லாமியராக நடித்துள்ள காரணம், ரஜினி ஒன்றிய அரசின் ஆதரவாளர் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சூப்பர்ஸ்டார் இதுவரை நடித்த படங்களில் எப்படி தனது கருத்துக்களை டயலாக்குகளாக அள்ளித் தெளிப்பாரோ, அதேபோல் இப்படத்திலும் ரஜினி ரசிகர்களுக்கு சொல்லாத விஷயத்தை கூறவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

Also Read: ஒரிஜினல் போஸ்டர்ன்னு சொல்ல மாட்டீங்களா.. லால் சலாம் ரஜினியை வச்சு செய்த ப்ளூ சட்டை

மேலும் இப்படத்தில் தன ரசிகர்களுக்கு ,தேசப்பற்று, மதம், இனம், சாதி போன்றவை இல்லாதவர்களாக மாற்றும் விதமாக பொழுதுபோக்கு படமாக இருக்கும் என பயில்வான் தெரிவித்துள்ள நிலையில், ரஜினி சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் இப்படத்தில் நச்சுனு இருக்கும் வகையில் உருவாகியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

லால் ஸலாம் படத்தை வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இப்படக்குழு தீவிரமடைந்துள்ள நிலையில், ரஜினியின் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். அதே சமயத்தில் ரஜினிகாந்த் இவ்வளவு வருடங்கள் தமிழ் கடவுள்கள், பாபா உள்ளிட்டோரை வைத்து படங்களில் நடித்த நிலையில், திடீரென இஸ்லாமியராக நடித்துள்ளது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

Also Read: 34 வருடம் கழித்து மீண்டும் ரஜினி நடிக்கும் கதாபாத்திரம்.. அவரே ஆசைப்பட்டு சொன்ன கதை

Trending News