லால் சலாம் மொய்தீன் பாய் கேரக்டர் முதலில் நடிக்க இருந்த ஹீரோ.. தனக்குத்தானே சூனியம் வைத்த ரஜினி

ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு பிறகு நடித்துக் கொண்டிருக்கும் படமான ஜெயிலர் மற்றும் லால் சலாம். தற்போது இரு தினங்களுக்கு முன்பு ரஜினியின் லால் சலாம் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதை பார்த்ததும் பல பேர் கேலி, கிண்டல் அடித்து வருகிறார்கள். இது என்ன பிரியாணி கடைக்கு விளம்பரமா பண்ணுகிறார். அந்த அளவுக்கு எடிட்டிங் போஸ்டர் மாதிரி இருக்கிறது என்று கலாய்த்து வருகிறார்கள்.

லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் இவர் நடித்துள்ளார். கிட்டத்தட்ட இவரு 44 வருடங்களுக்கு முன்பு நடித்த அலாவுதீன் அற்புத விளக்கு படத்திற்கு பின் இஸ்லாமியராய் இந்த படத்தில் தான் ரஜினி நடித்துள்ளார். ஆனால் இந்த படத்திற்கு முதலில் இவரை வைத்து இந்த கதையே அவருடைய பொண்ணு ஆரம்பிக்கவில்லை.

Also read: பல வருட சினிமா ட்ரெண்டை மாற்றிய 5 இயக்குனர்கள்.. அவெஞ்சர்ஸையே மிரள வைத்த ரஜினி

இந்தப் படத்திற்கு முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மொய்தின் பாய் கதாபாத்திரத்துக்கு யோசித்து கதை எழுதினது வேறு ஒருவரை. அதாவது இந்த கேரக்டர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அவரை நினைத்து தான் மொய்தீன் பாய் கதையை ரெடி பண்ணி இருக்கிறார். அத்துடன் அவரிடம் கதையை சொல்லி இவரும் எனக்கு கதை பிடித்திருக்கிறது நடிக்கிறேன் என்று சம்மதமும் தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு ஐஸ்வர்யா இதைப் பற்றி அவருடைய அப்பா ரஜினிகாந்த் இடம் கூறியிருக்கிறார். அவர் அப்படி என்ன கதை எனக்கு கொஞ்சம் சொல்லு என்று கேட்டிருக்கிறார். இவரும் லால் சலாம் படத்தின் மொத்த கதையையும் கூறி அதில் மொய்தின் பாய் கேரக்டரையும் கூறி இருக்கிறார்.

Also read: லால் சலாம் ரஜினியின் கேரியரில் முக்கிய படம்.. கதையை லீக் செய்த பயில்வான்

இதை கேட்டு ரஜினி மிகவும் அசந்து போய் இந்த படத்தில் மொய்தின் பாய் கேரக்டராக நான் நடிக்கிறேன் என்று இவரே கேட்டு வாங்கி இருக்கிறார். இதை இப்படியும் சொல்லலாம் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு தான் தற்போது பலதரப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

அப்படி இவர் அசந்து போன அந்த கதை என்னவென்று தெரியவில்லை. ஆனால் இந்த போஸ்டரை பார்த்து இவரை எந்த அளவுக்கு வச்சு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செஞ்சிட்டு வராங்க. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்குமாக இவருடைய படம். ரிலீஸ் ஆகி அதில் இவருடைய கேரக்டர் சொல்லும்படி அமைந்தால் இவர் எடுத்த முடிவு சரியாகும். எப்போதுமே போஸ்டர் பார்த்து முடிவு பண்ண முடியாது ஒருவேளை கதைப்படி இப்படம் நன்றாக அமைந்திருந்தால் தலைவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.

Also read: ரஜினி முன்னாடியே இந்த படம் ஓடாது எனக் கூறிய ராகவா லாரன்ஸ்.. கடுப்பாகி சூப்பர் ஸ்டார் எடுத்த முடிவு