செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அம்பானிக்கு தண்ணி காட்டும் லலித் அண்ட் ஏஜிஎஸ்.. கல்லாவை நிரப்ப காட்டும் வியாபார தந்திரம்

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களான லலித் மற்றும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனங்கள் சினிமாவை வைத்து செய்யும் வியாபாரத்தை பார்த்தால் அம்பானி, அதானிக்கே டஃப் கொடுப்பார்கள் போல. ஏனென்றால் லலித் மற்றும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனமும் தரமான சம்பவங்களை செய்து கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர் லலித் இந்த வருட பொங்கலுக்கு ரிலீசாகி பாக்ஸ் ஆபிஸை மிரள விட்ட விஜய்யின் வாரிசு படத்தின் தியேட்டரிகள் உரிமையை வாங்கி நல்ல லாபம் பார்த்தார். அதேபோல் இப்பொழுது லியோ படத்தின் தியேட்டரிகள் உரிமையை ஏஜிஎஸ் வாங்கி இருக்கிறது.

Also Read: விஜய்யுடன் நடிக்க மறுத்த 3 ஹீரோக்கள்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

லியோ படத்தை லலித் தான் தயாரித்துள்ளார். இவ்வாறு தயாரிப்பிலும் சரி வினியோகம் செய்வதிலும் சரி லலித் மற்றும் ஏஜிஸ் நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தரமான படங்களை கைப்பற்றி தங்களது வியாபார தந்திரங்களை சரியாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் படங்களை விநியோகம் செய்யும் உரிமையை மாறி மாறி வாங்குவதன் பின்னணியில் ஒரு பெரிய வியாபார தந்திரமே இருக்கிறது. வாரிசு படத்திற்கு நன்றாக லாபத்தை காட்ட வேண்டும், அப்படி கட்டினால் தான் லியோ படமும் வியாபாரம் ஆகும். இப்பொழுது லியோ படத்தை தயாரிப்பது லலித்.

Also Read: விஜய் வேகவேகமாக அதை செய்தே ஆகணும், இல்லனா காணாம போயிருவாரு.. பயமுறுத்தி விட்ட பிரசாந்த்

அதனால்தான் வாரிசு படத்தை வாங்கி லலித் நல்ல லாபத்தை காட்டினார். இதேதான் விஜய்யின் அடுத்த லியோ படத்திலும் நடக்கப் போகிறது. இந்த படத்தின் தியேட்டரிக்கல் உரிமையை வாங்கியது ஏஜிஎஸ். அதனால் இந்த படத்தின் பிசினஸில் ஒரு பெரிய லாபத்தை காட்ட வேண்டும்.

ஏனென்றால் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தை தயாரிக்கப் போவதும் ஏஜிஎஸ் தான். அப்போதுதான் அந்த படம் நல்ல லாபம் பெறும். இதற்காக இவர்கள் பல கோடிகளை புரமோஷன் பணிகளுக்காகவே வாரி இறைக்கின்றனர். நாளுக்கு நாள் ரசிகர்களிடமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் குறைய விடாமல் வைத்திருக்கின்றனர்.

Also Read: உச்சம் தொட்டாலும் புகழ் போதையில் சிக்காத லோகேஷ்.. கமல் முதல் ரஜினி வரை பிரமிக்க வைக்க காரணம்

Trending News