Vignesh shivan – Lalith: இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு எந்த அப்டேட்டுகளும் இல்லாமல் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு, உலகநாயகன் கமலஹாசனின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கும் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விக்கி மற்றும் பிரதீப் அறிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் பிரதீப் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் படத்தை கமல் தயாரிக்கவில்லை என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. விக்கி மற்றும் பிரதீப் இருவரின் சம்பளம் கமலஹாசனின் பட்ஜெட்டுக்கு சரி வராததால் இந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டதாக தெரிகிறது. விக்னேஷ் சிவனுக்கு சோதனைக்கு மேல் சோதனை காலம் இது என்பது போல் தான் நடந்து கொண்டிருக்கிறது.
லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித், விக்னேஷ் சிவனுக்கு இப்போது வாய்ப்பு வழங்கி இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் காத்து வாக்குல காதல் என்ற பாடல் படத்தில் இணைந்தார்கள். அந்த சமயத்தில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூட சொல்லப்பட்டது. அது எல்லாவற்றையும் தாண்டி இப்போது இவர்கள் இருவரும் இணைந்து இருக்கிறார்கள்.
லலித் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அதில் ஒரு பெரிய செக்கை வைத்திருக்கிறார். அவர் சொல்லும் இரண்டு நடிகர்களை படத்தில் நடிக்க வைத்தால் தான் அந்த படத்தை நான் தயாரிப்பேன் என்று சொல்லி இருக்கிறாராம். எஸ் ஜே சூர்யா மற்றும் மிஸ்கின் தான் அந்த இரண்டு நடிகர்கள், இவர்கள் இருந்தால்தான் இந்த படம் உருவாகும்.
மிஸ்கின் ஏற்கனவே லியோ படத்தில் நடித்திருப்பதால் லலித் உடன் நல்ல நட்பாக பழகி இருக்கிறார். அதனால் தான் லலித், தன்னுடைய படத்தில் மிஸ்கினுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். மேலும் இப்போது தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா இருந்தாலே படம் வெற்றி தான் என்று ஆகிவிட்டது. அதனால் தான் அவரையும் விக்கியிடம் லாக் செய்ய சொல்கிறார்.
இப்போது மிஸ்கின் மற்றும் எஸ் ஜே சூர்யாவுக்கு ஏற்றவாறு ஸ்க்ரிப்டை விக்னேஷ் சிவன் மாற்ற வேண்டும். அவர் மாற்றும் ஸ்க்ரிப்ட் பிரதீப் ரங்கநாதனுக்கு பிடிக்க வேண்டும். வாய்ப்பு கொடுத்தும் விக்னேஷ் சிவனுக்கு ஏற்படுத்தி இருக்கிறார். எப்படியும் அட்ஜஸ்ட் பண்ணி விக்கி இப்போது ஒரு படம் இயக்கினால் தான் அப்டேட் இயக்குனராக மாற முடியும்.
Also Read:விஜய்யை நம்பி ஓவர் ஆட்டம் போட்ட லலித்.. எதிரியிடமே தஞ்சம் அடைந்த கொடுமை