புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அப்படி இப்படின்னு தியேட்டர்ல ஓட்டியாச்சு.. ஓடிடி-யில் ஓட்டுவதற்கு லோகேஷ் வைத்து காய் நகர்த்தும் லலித்

Lokesh-Leo: லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு லியோ படம் திரையரங்குகளில் வெளியானது. இதுவரை தமிழ் சினிமா இப்படி ஒரு படத்திற்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டு ஏமாற்றத்தை லியோ படம் கொடுத்திருக்கிறது.

ஆனாலும் லோகேஷ் இந்த படத்தை இயக்குகிறார் என்பதாலேயே லியோ படத்திற்கு முன்பதிவு பெருமளவில் விற்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் நாளே கிட்டத்தட்ட 148.5 கோடி வசூல் செய்ததாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் பெற்றிருக்கிறது.

அதன்படி பத்தே நாட்களில் கிட்டத்தட்ட 500 கோடி வசூலை உலகம் முழுவதும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் சமீபகாலமாக திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் வெளியாகி விடுகிறது. அந்த வகையில் லியோ படத்தை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி இருக்கிறது. மிக விரைவில் லியோ ஓடிடிக்கு வர இருக்கிறது.

எப்படியோ தியேட்டரில் பெரிய பரபரப்பை கூட்டி வசூலை அள்ளிய லியோ படக்குழு இப்போது ஓடிடியிலும் கல்லாகட்ட ஒரு புதிய யுத்தியை கையாண்டு இருக்கிறார்கள். அதாவது லியோ படத்தில் தியேட்டரில் இடம் பெறாத காட்சி ஓடிடியில் வர இருக்கிறதாம். ஆண்டனி தாஸிடம் பார்த்திபன் லியோ என்ற உண்மையை சொல்லும் காட்சி 18 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் இடம்பெற இருக்கிறதாம்.

லியோ படத்தில் ஹைப்பை ஏற்றுவதற்காக படக்குழு தரப்பிலிருந்து இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. இப்போதும் லோகேஷை வைத்து கல்லா கட்டுவதற்காக தந்திரமாக லலித் வேலை செய்துள்ளார். இந்நிலையில் நாளை தான் லியோ படத்தின் வெற்றி விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.

இதில் லோகேஷ் ஓடிடி குறித்து பேசினால் தான் உண்மை நிலை என்னவென்று தெரியவரும். ஏற்கனவே லோகேஷ் லியோ பட குழுவை வாரி விடும்படி பல விஷயங்களை கூறும் நிலையில் கண்டிப்பாக இதுகுறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கலாம். மேலும் ஓடிடியில் லியோ படம் வெளியானால் தியேட்டரில் வசூல் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் லியோ படம் ஆயிரம் கோடி வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Trending News