ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

90-களின் பெஸ்ட் பினிஷேர்.. அப்போதே ஆஸ்திரேலிய அணிக்கு தண்ணி காட்டியது யார் தெரியுமா.?

இந்திய அணிக்கு எப்படி ஒரு பெஸ்ட் பினிஷராக தோனி விளங்கினாறோ அதேபோல் தென்னாபிரிக்க அணிக்கு லான்ஸ் குளூஸ்னர். எந்த ஒரு கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க முடியாத வீரர் குளூஸ்னர். தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

1996முதல் 2004ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்க அணியின் ஒரு அசைக்க முடியாத ஆல்-ரவுண்டராக வலம் வந்தவர் லான்ஸ் குளூஸ்னர். முதலில் பந்துவீச்சாளராக அறிமுகமான இவர் 8 அல்லது 9வது ஆளாக களமிறங்குவார். ஆரம்பத்தில் இவருக்கு பேட்டிங்கில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

1996 ஆம் காலகட்டத்தில் லான்ஸ் குளூஸ்னர் தென்னாப்பிரிக்கா அணிக்காக அறிமுகமானார். அப்பொழுது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்தது தென்னாபிரிக்க அணி. அந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியிலேயே குளூஸ்னர், முகமது அசாருதீனிடம் படுமோசமாக அடி வாங்கினார். வெறும் 14 ஓவர்கள் வீசி 78 ரன்களை வாரி வழங்கினார்.

Lance-Cinemapettai.jpg
Lance-Cinemapettai.jpg

சுதாரித்துக்கொண்ட லான்ஸ் குளூஸ்னர் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை துவம்சம் செய்தார். இரண்டாவது இன்னிங்சில் வெறும் 64 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பின்னர் இந்தியாவுக்கு எதிராக அதே தொடரில் ஒரு அதிரடி சதம் அடித்தும் தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என நிரூபித்து காட்டினார்.

Klusner-Cinemapettai.jpg
Klusner-Cinemapettai.jpg

1999 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் லான்ஸ் குளூஸ்னருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அனைத்துப் போட்டிகளையும் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அதிரடியாக முடித்துக் கொடுப்பார். அந்த உலகக் கோப்பைத் தொடரிலும் ஆட்டநாயகன் இவரே. அரை இறுதிப்போட்டி வரை விளையாடி 281 ரன்களையும் 17 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்.

அந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை பங்கம் செய்திருப்பார் குளூஸ்னர். ஆலன் டொனால்டை எதிர்முனையில் நிற்க வைத்துவிட்டு வெற்றிக்குத் தேவைப்படும் ரன்களை விளாசி இருப்பார். ஆனால் போட்டி டிராவில் முடிவடைந்து, சூப்பர் சிக்ஸ் போட்டிகளில் அதிக வெற்றி என்ற அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும். தென்ஆப்பிரிக்க அணி மட்டும் அந்த போட்டியில் வென்று இருந்தால் உலக கோப்பையை வாங்கி தந்த பட்டியலில் குளூஸ்னர் இடம் பிடித்திருப்பார்.

Trending News