திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டிஆர்பி-யில் தூள் கிளப்பும் சன் டிவி.. டாப் 5லிருந்து துரத்தப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தற்போது இணையத்தில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

இதில் முதலிடத்தை வழக்கம்போல் சன் டிவியின் கயல் சீரியல் பிடித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து இந்தக் காலத்தில் இரண்டு மனைவிகளை திருமணம் செய்து கொண்டால் என்ன ஆகும் என்பதையும் காட்டிக்கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் 2-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

Also Read: கரண்ட் பில் கட்ட கூட வக்கில்ல பாக்யா.. ஏளனமாகப் பேசிய கோபியின் வாரிசு

இதைத்தொடர்ந்து அண்ணன்-தங்கை பாசப் போராட்டத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தும் வானத்தைப்போல சீரியல் 3-ம் இடத்தையும், அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் கதையான கண்ணான கண்ணே சீரியல்4-ம் இடத்தையும் பெற்றிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக அதிரடி காதல் கதைக்களத்தை கொண்ட ரோஜா சீரியல் 5-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது. இப்படி தொடர்ந்து 5 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி, டாப் 5 இடத்தில் மற்ற எந்த சேனல்களையும் உள்ளே விடாமல் கடைசி வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் மாஸ் காட்டியுள்ளது.

Also Read: 1000 எபிசோடை கடந்த சூப்பர் ஹிட் சீரியலின் கதாநாயகி தூக்கிய சன் டிவி.. துவங்கப்படும் புதிய சீரியல்

இதன்பிறகு 6-வது இடம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பெற்றிருக்கிறது. இந்த சீரியல், ஒரு வாரத்திற்கு முன்பு டிஆர்பி-யில் சன் டிவி சீரியல்களுக்கு கடும் போட்டியாக இருந்த நிலையில், தற்போது டல் அடித்துக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் இந்த சீரியலின் பாக்யா ராதிகாவின் சக்களத்தி சண்டை சூடு பிடித்தால் மட்டுமே டிஆர்பி-யில் முன்னிலை வகிக்க வாய்ப்பிருக்கிறது.

7-வது இடம் மறுபடியும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் பெற்றிருக்கிறது. 8-வது இடம் விஜய் டிவியின் இரண்டு சீரியல்களான ராஜா ராணி 2 மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற இரு சீரியல்களுக்கு கிடைத்திருக்கிறது. 9-வது இடம் பாரதிகண்ணம்மாவிற்கும், 10-வது இடம் தமிழும் சரஸ்வதியும் பெற்றிருக்கிறது.

இப்படி டிஆர்பி-யில் இந்த வாரம் சன் டிவியே முதல் 5 இடங்களை தக்க வைத்து, விஜய் டிவியின் சீரியல்களை உள்ளே விடாமல் துரத்தி அடித்திருக்கிறது. இதன் பிறகு அடுத்த வாரம் சீரியலின் கதைக்களம் மாறி, விறுவிறுப்பை கூட்டி, விஜய் டிவி, சன் டிவியின் சீரியல்களுக்கும் கடும் போட்டியாக மாறும் என சின்னத்திரை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Also Read: மறு ஒளிபரப்பில் மண்ணை கவ்விய 6 மெகா சீரியல்கள்.. எதிர்ப்பார்ப்புக்கு கிடைத்த மரண அடி

Trending News