திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

என் அப்பாவ இப்படி பேச வாய் கூசலை.. நேருக்கு நேர் மோத பயில்வானுக்கு சவால் விட்ட மாரிமுத்துவின் வாரிசு

Bayilwan Ranganathan – Marimuthu: சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பற்றிய ஒரு சில விஷயங்களை யூடியூபில் வெட்ட வெளிச்சமாக பேசுபவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் இப்படி பேசுவது ஒரு தரப்பட்ட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், பிரபலங்களிடையே பயங்கர வெறுப்பை தான் சம்பாதித்து வருகிறார். தற்போது ஏடாகூடமாக பேசி மறைந்த நடிகர் மாரிமுத்துவின் விஷயத்தில் சிக்கி இருக்கிறார் இவர்.

உதவி இயக்குனராக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கி தமிழக மக்கள் கொண்டாடிய ஆதி குணசேகரன் ஆக வாழ்க்கையை முடித்துக் கொண்டவர் தான் நடிகர் மாரிமுத்து. இவருடைய மறைவு இன்று வரை ரசிகர்களிடையே ஆறாத தழும்பாக இருந்து வருகிறது. அவரைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே கேட்க விரும்பும் மக்களுக்கு, ஒரு சில கசப்பான விஷயத்தை சொல்லி பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறார் பயில்வான்.

Also Read:மாஸ் என்ட்ரி கொடுக்கும் குணசேகரன்.. அனல் பறக்கும் எதிர்நீச்சல் டிஆர்பி

மாரிமுத்து இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோதிடர்களிடையே வாக்குவாதம் செய்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இது பற்றி பேசிய பயில்வான் அவர் அப்படி ஜோசியம் உண்மை இல்லை, சாமியே இல்லை என்று சொன்னதால்தான் இறந்து விட்டார் என்று பேசி இருக்கிறார்.

அந்த வீடியோ வெளியான போதே சின்னத்திரை நடிகை ரேகா நாயர் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இதற்கிடையில் சமீபத்தில் மறைந்த மாரிமுத்துவின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அதில் அவருடைய குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அப்போது மாரிமுத்துவின் மகன் பயில்வான் ரங்கநாதனின் வீடியோ பற்றி பேசியிருந்தார்.

Also Read:இந்த வார டிஆர்பி-யில் மாஸ் காட்டும் டாப் 6 சீரியல்கள்.. மற்ற சேனல்களை திணறடிக்கும் எதிர்நீச்சல்

என் அப்பா சாமி இல்லை என்று சொன்னதால்தான் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி என்றால் அது போன்ற விவாதத்தில் பேச நானும் தயாராக இருக்கிறேன் என்று மாரிமுத்துவின் மகன் சொல்லி இருக்கிறார். மேலும் இறந்த ஒருவரை பற்றி இதுபோன்று பேசுவது ரொம்பவே தவறு. காசுக்காக அவரைப் பற்றி பேசுவது, அவருடைய ஆத்மா அங்கு சுற்றுகிறது, இங்கு சுற்றுகிறது என யூடியூபில் வீடியோக்கள் போடுவது ரொம்பவே தவறு என மாரிமுத்துவின் தம்பி சொல்லி இருக்கிறார்.

அந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய நடிகர் விமல், மாரிமுத்து சாமி இல்லை என்று சொன்னாரே தவிர அவர் சம்பந்தப்பட்ட யாரையும் கோவிலுக்கு போகக்கூடாது, சாமி கும்பிட கூடாது என சொல்லவில்லை. மேலும் மறைந்த நடிகர் மயில்சாமி சதா காலமும் சிவன் கோவிலில் தான் இருப்பார். அப்படி சாமி கும்பிட்ட அவருக்கும் மரணம் தான் நேர்ந்தது. எனவே இது போன்ற பேசுவது தவறு என சொல்லி இருக்கிறார்.

Also Read:இந்த சீசனில் விஜய் டிவி இறக்கிவிடும் வாரிசு.. மொத்த லிஸ்டையும் பார்த்தா டிஆர்பி-கே பஞ்சம் இருக்காது போலையே

Trending News