சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சரவணன் மீனாட்சி டூ சிங்கப்பெண்ணே, யங் மாமியார்.. நேத்ரனின் காதல் மனைவி தீபா நேத்ரன்

Deepa Nethuran: பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் நேற்று காலமாகி இருக்கிறார். கடந்த ஆறு மாத காலமாக நுரையீரல் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சை முடிந்த நிலையிலும் நோயின் தாக்கம் கல்லீரலையும் பாதித்திருக்கும் என்பதால் சில நாட்கள் ஐசியூவில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக அவருடைய மகள் தெரிவித்திருந்த நிலையில் அகால மரணம் அடைந்திருக்கிறார்.

நேத்ரனை தாண்டி அவருடைய மகள்கள் இருவரும் தற்போது மீடியாவுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். மகள் அபிநயா கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் இளைய மகள் அஞ்சனா திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வந்து கொண்டிருக்கிறார்.

நேத்ரனின் காதல் மனைவி தீபா நேத்ரன்

இவருடைய மனைவி தான் சீரியல் நடிகை தீபா நேத்ரன். சன் டிவியில் பெரிய வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலில் மகேஷின் அம்மாவாக மிரட்டிக் கொண்டிருக்கிறார் தீபா நேத்ரன்.

இவர் 17 வயதில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வந்து அதன் பின்னர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அலைபாயுதே சீரியலின் மூலம் சின்ன திரைக்கு அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் நடிகர் நேத்ரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குழந்தைகள் பிறந்த பிறகு தீபா சின்ன திரையை விட்டு ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் குழந்தைகள் வளர்ந்த பிறகு தான் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கேரக்டரில் கவின் நடித்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.

அந்த சீரியலில் கவினுக்கு அம்மாவாக நடித்தவர் இவர்தான். அது மட்டும் இல்லாமல் ஜீ தமிழில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து சின்னத்திரையில் மாமியார் கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சிங்க பெண்ணே சீரியல்தான் முதன் முதலில் இவரை நெகட்டிவ் சேரில் காட்டி இருக்கிறது. சீரியல்கள் மட்டுமில்லாமல் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார் தீபா நேத்ரன்.

Trending News